வவுனியாவில் சோகம் ஆசிரியர் செயலால் மாணவன் தற்கொலை!

வவனியா கனகராயன்குளம் கிராமத்தில் இன்று மாலை (3105.07) ஆசிரியர் சக மாணவிகள் முன்னிலையில் தாக்கியதில் விரத்தியடைந்த மாணவன் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பில் எமது செய்தியாளர் தெரிவிக்கையில் வவனியா கனகராயன்குளம் குறிசுட்டான் பகுதியில் வசித்துவரும் தர்மராசா ஜனார்தன் வயது பதினேழு என்ற மாணவன் வழமை போன்று காலை பாடசாலைக்கு சென்றுள்ளார் .அங்கு சக மாணவிகள் முன்னிலையில் ஆசிரியர் அடித்ததில் விரக்தியடைந்த மாணவன் பாடசாலை விட்டு வீட்டுக்கு சென்று வீட்டிலிருந்த மருந்தினை உட்கோண்டு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பில் வவுனியா மாவட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் .குறித்த...

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தமிழர்களை அரசாங்கத்திடமே கேட்க முடியும்!!

இறுதி கட்ட யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்ட உறவுகளை அரசாங்கத்திடமே கேட்கமுடியும் என  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள்   கிடைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களது பெற்றோர்கள்   போராடிவரும் நிலையில், வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரேயின் கருத்து  பாதிக்கப்பட்ட மக்களை மேலும்  வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாக  அவர்  குறிப்பிட்டுள்ளார். யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு வலியுறுத்தி   வடக்கு, கிழக்கில்  காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகள், இந்திய இராணுவத்தினர் மற்றும் ஆயுத குழுக்களினால்...

புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தினர் தெற்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் அன்பளிப்பு!!

தெற்கிலே வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரணப்பணியாக பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைய புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தினர்  நேற்று  மாலை 4 மணியளவில் பிரதேச செயலகத்திடம் பொருட்களை ஒப்படைத்தனர்.  

எந்த தீர்வும் இன்றி 93வது நாளாக தொடரும் கோப்பாபுலவு மக்களின் போராட்டம்!!

கடந்த பங்குனி மாதம் 1ம் திகதி பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து கோப்பாபுலவு மக்கள் தமது பூர்மீக நிலங்களை விடுவிக்க கோரி இராணுவ படை கட்டளை தலமையகம் முன்பாக தமது போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கின்ற நிலையில் எந்த வித தீர்வுகளும் கிடைக்காமல் இன்று 93வது நாளாக இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.   அவர்களது போராட்ட களத்துக்கு அண்மையில் வீதி திருத்த வேலைகள் நடைபெற்று கொண்டு இருப்பதனால் அந்த தூசுகள் மற்றும் தார் எரிக்கப்படும் வெக்கையால் பல...

சற்றுமுன்னர் வற்றாப்பளை பகுதியில் வேக கட்டுபாட்டை இழந்த வாகனம் ஒன்று விபத்து!!

புதுகுடியிருப்பு பிரதான வீதியில் இருந்து வற்றாப்பளை வந்து கொண்டிருந்த வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்த  நிலையில் வீதியை விட்டு விலகி பனை மரமொன்றில் பாய்ந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் எவருக்கும் எந்த வித சேதங்களும் ஏற்ப்பட்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

தென் பகுதிக்கு அனுப்புவதற்க்காக பொலிஸாரால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் வாகனத்தில்….!!

தென் பகுதியில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்க்காக முள்ளியவளை சிவில் பொலிஸாரால் சேகரிக்கப்பட்ட  பொருட்கள் இப்பொழுது அவர்களுக்கு அனுப்பி வைப்பதற்க்காக வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டிருக்கிறது.

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போரட்டம் 85வது நாளாக வலியுடன் தொடர்கிறது!!

முல்லைத்தீவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் எந்த ஒரு தீர்வும் கிடைக்காத நிலையில் இன்று 85வது நாளாக இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டம் முன்பாக கூடாரம் அமைத்து தொடங்கப்பட்ட போராட்டம் இன்று வரை நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை கிளிநொச்சியில் நேற்றைய தினம் 100வது நாளாக இடம்பெற்ற வேளையில் முல்லைத்தீவில் இருந்து பெருந்தொகையான மக்கள் சென்று அந்த போராட்டத்தில் பங்குபற்றி தமது ஆதரவினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஒட்டுசுட்டானில் இன்று புதுவருட விளையாட்டு போட்டி நிகழ்வுகள்!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில்   "வளம்மிக்க நாளைய தினத்திற்கு ஒளிமயமான அடித்தளம்" என்ற தொனிப்பொருளில் கமநல வங்கி  நடாத்தும் புது வருட விளையாட்டுப் போட்டி நிகழ்வானது மு.ப.9.00 மணியளவில் ஆரம்பித்து மிக சிறப்பான முறையில் நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.  

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் முன்னாள் போராளிகள் 4பேர் சமூகத்துடன் இணைவு

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருடம் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று (31.05.2017) காலை 10.30மணியளவில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப்பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, நிலையபயிற்சிப் பொறுப்பாளர் சித்திரகுணதூங்க. சிரேஸ்ட அதிகாரி சமன்பேரேரா. பூந்தோட்ட நிலை பொறுப்பதிகாரி கேணல் ஹேமிடோன் சர்வமதத்தலைவர்கள்.முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், பொலிசார், விமானப்படையினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இன்று புனர்வாழ் நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பெற்ற சற்குணசிங்கம் தயாபரன்(வயது 44)...

தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்!!

தனுஷ் நடிப்பில் தயாராகும் வட சென்னை படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். ஏனெனில் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி இப்படம் மூலம் மீண்டும் இணைவதாலேயே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப்பட படப்பிடிப்பு எப்போது தொடர்ந்து நடக்கும் என்று தெரியவில்லை. அண்மையில் இப்படத்தில் இருந்து முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதி சில காரணங்களால் விலகி இருந்தார். இந்த நிலையில் அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனரும், நடிகருமான அமீர் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.