மாணவர்கள் மீது பாதுகாப்புத்தரப்பினர் தாக்குதல் 17 பேர் படுகாயம்

கொழும்பில் அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் ஏற்பட்ட முறுகல் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது மாணவர்கள் மீது பாதுகாப்புத்தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக 17 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 17 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சில மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, போராட்டத்தைக்கட்டுப்படுத்த பொலிஸார் ஐந்து முறை கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் தண்ணீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், மாணவர்கள் காயமடைந்ததுடன், சிலர் கைது...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கிளிநொச்சியிலும்!

தமிழினப் படுகொலை நாளான மே18 நினைவேந்தல் நிகழ்வுகளை வழமைபோன்று இம்முறையும் கிளிநொச்சியில் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக்கிளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் 2017 மே 18ஆம் திகதி மாலை 4 மணிக்கு சர்வமத பிரார்த்தனைகளுடன் நடைபெறவுள்ளது. உலக வரலாற்றில் தமிழர்களை இல்லாது ஒழிக்கவேண்டும் என்கின்ற எண்ணத்தோடு இலங்கை அரசினால் அரங்கேற்றிய கொடூர யுத்தத்தின் நினைவேந்தல் நிகழ்வு சர்வமதத்தலைவர்களின் மத ஆராதனைகளுடனும் இறைவணக்கத்துடனும் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்துபொது அமைப்புக்கள், மதத்தலைவர்கள், மாணவர்கள், மக்கள் என அனைவரையும் கலந்துகௌ்ளுமாறு ஏற்பாட்டாளர்கள்...

எழில்ராஜன் அடிகளார் விசாரணைக்குப் பின்னர் விடுதலை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், விசாரணைக்குப் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் தலைமையகத்தில் வைத்து, ஒன்றரை மணி நேரம் அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அருட்தந்தை, நேற்று(1 6 ) இரவு 8 மணியளவில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் தேவாலயப்பகுதியில், இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக, நினைவுக் கற்கள் பொறிக்கப்பட்டு வருகின்றன. இதில் விடுதலைப் புலிகளின் பெயரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்தே...

முள்ளிவாய்க்கால் பகுதியில் விபத்து- சிறுவன் பலி

முள்ளிவாய்காலில் இன்று பிற்ப்பகல் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுவவுனியா பரனாட்டகல் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு உறவினர் வீடு ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்காக வருகைதந்தவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி பேருந்தின் முன்னால் வீதியை கடக்க முற்ப்பட்ட வேளை  பின்னால் வருகைதந்த கப் ரக வாகனம் சிறுவனில் மோதியதாகவும் காயமடைந்த சிறுவன் மான்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு உயிரிளந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்தில் கொல்லப்பட்ட சிறுவன் பரனாட்டகல் ஓமந்தை வவுனியாவை சேர்ந்த செந்தில்நாதன்...

சீனாவின் முதலீடுகளை வரவேற்கிறார் சிறிலங்கா பிரதமர்!

சிறிலங்காவில் பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் முதலீடுகளை வரவேற்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். பீஜிங்கில் நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாந்தோட்டை,  கொழும்பு துறைமுகநகரத் திட்டங்களை வெற்றிகரமாக முன்நோக்கி நகர்த்துவதற்கு சீனாவுடன் இணைந்து பணியாற்ற சிறிலங்கா விரும்புகிறது என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். சீன- சிறிலங்கா  சுதந்திர வர்த்தக வலய கட்டுமானமானது, இருதரப்பு வர்த்தகத்தில் நியாயமான மற்றும் நிலையான அபிவிருத்தியை...

பிரித்தானிய தூதரகத்தில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு!

இலங்கை பிரித்தானிய தூதரகத்தினால் ஓரினசேர்க்கை உரிமைக்கான தேசிய கொடி, தூதரக அலுவலகத்தினால் ஏற்றப்பட்டுள்ளது. பிரித்தானிய நாட்டு தேசிய கொடிக்கு அருகில் இந்த கொடி ஏற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இலங்கையில் ஓரினசேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்குவதற்குமான பல திட்டங்களுக்கு பிரித்தானிய தூதரக அலுவலகம் உதவியுள்ளது. இந்த ஓரினசேர்க்கை கொடி ஏற்பட்டமை தொடர்பில் பிரித்தானிய தூதரக அலுவலகத்தினால் டுவிட்டர் பதிவொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மனித உரிமைகள் உலகளவில் உள்ளன. உலகளாவிய சகிப்புத்தன்மை மற்றும் பாகுபாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ஓரினசேர்க்கை மக்களுக்கு குறைந்தது அல்ல.

திருகோணமலைத் துறைமுகத்தில் அவுஸ்ரேலிய ரோந்துக் கப்பல்!!

அவுஸ்ரேலிய எல்லை காவல்படையின் பாரிய ரோந்துக் கப்பலான “ஓசன் ஷீல்ட்” திருகோணமலைத் துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. அவுஸ்ரேலிய எல்லை காவல்படையின் கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். மனித கடத்தல், சட்டவிரோத மீன்பிடி, நாடுகடந்த குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இந்தக் கப்பல் ஆழ்கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மனித கடத்தலைத் தடுப்பதற்கு சிறிலங்கா மிகுந்த ஆதரவை அளித்து வருவதாக இந்தக் கப்பலுடன் வந்துள்ள அவுஸ்ரேலிய எல்லை நடவடிக்கை தளபதி எயர் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் ஒஸ்போர்ன் தெரிவித்துள்ளார். இந்தக் கப்பலின் பயணம், சிறிலங்காவுடனான...

‘O’ குரூப் ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு ஏற்படாது!

மாரடைப்பு கொடிய நோயாகும். அதனால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அதை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுக் கடை பிடிக்கப்படுகின்றன.  இந்த நிலையில் எந்த வகை ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் ஏற்படும் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் நெதர்லாந்தில் குரோனிங் ஜென் என்ற இடத்தில் உள்ள தேசா கோலே பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் மைய நிபுணர்களின் ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘ஒ’ குரூப் ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் மிக குறைவு என தெரிய வந்துள்ளது. அதே நேரம் ஏ.பி.,...

கருவாடு சாப்பிடும் போது இவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது!

கருவாடு யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள். கருவாடு பலருக்கு சரியாக சமைக்க தெரியாது. அதனால், சுவை சரியாக வராது. எல்லா வகை கருவாடும் உடலுக்கு நல்ல தான். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். ஆனால், கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது, யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என உங்களுக்கு தெரியுமா? கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள்...

சீரகத்தை மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம்?

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி,...