கிளிநொச்சியில் விபச்சார நிலையம் முற்றுகை-நால்வர் கைது

1092

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் பல நாட்களாக விபரச்சார நிலையம் ஒன்று இயங்கி வந்துள்ளது.

குறித்த விபச்சார நிலையம் தொடர்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்னவிற்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான்யறாபக்சவின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி உதவிப் பொலிஸ் பரிசோதகர் தர்சன கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குறித்த வீட்டை சோதனை இடுவதற்கு அனுமதி கோரினார்.

இதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதியினால் குறித்த வீட்டை தேடுதல் நடத்த, பார்வையிட, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தில் அதற்கென தரப்பட்டவாறான தத்துவங்களை பிரயோகிக்கவும் கடமையை புரியவும் கிளிநொச்சி உதவிப் பொலிஸ் பரிசோதகர் தர்சனவிற்கு அனுமதி வழங்கப்பட்டது

இதனையத்து கிளிநொச்சி பொலிஸார் இன்று காலை வாடிக்கையாளர் போன்று விபச்சார நிலையத்திற்கு சென்று பணம் கொடுத்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

Facebook Comments