பிரித்தானியா வாழ் தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பிரித்தானியா வாழ் தமிழர்களும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர். இதில் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையை நேரடியாக அனுபவித்த, மற்றும் தமிழ் இனத்திற்காக போராடிய சசிகரன் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றி வைத்துள்ளார். பிரித்தானிய தேசியக்கொடியை தமிழர் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் தர்சன் ஏற்றி வைத்துள்ளார். தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியை தமிழினத்திற்காக தொடர்ந்து போராடிய அருகுமாரன் ஏற்றி வைத்துள்ளார். பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளான அளவில்...

இலங்கையின் 200 இணையதளங்களை முடக்கி தமிழினப் படுகொலைக்கு எதிராக முழக்கம்!

இலங்கையின் 200-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் தமிழ் இணைய ஊடுருவலாளா்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. தமிழ் இணைய ஊடுருவலாளா்களால் முடக்கப்பட்ட இணையதளங்கள் அனைத்திலும் இனப்படுகொலை படங்கள் மற்றும் புலிக்கொடி ஏற்றி தமிழ் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றையதினம் முடக்கப்பட்ட அனைத்து இணையதளங்களிலும் தமிழினப் படுகொலைக்கு எதிரான குரலே முழுக்கிக்கொண்டிருக்கின்றன. முடக்கப்பட்ட இணையதளங்களை இந்த இணைப்பில் சென்று பார்வையிடலாம்: a href="http://mirror-h.org/search/hacker/8172/pages/4  

கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி! இராணுவத்தினருக்கு வாழ்த்துக் கூச்சல்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தம் உறவுகளுக்காக இன்று அமைதியான முறையில் அஞ்சலி நிகழ்வுகளை தமிழர்கள் அனுஷ்டித்திருந்தனர். யுத்தம் எனும் போர்வையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர்கள் உறவுகள் நினைவு கூறும் நாளாகவே இந்த மே 18 ஆம் திகதியினை தமிழ்மக்களும் பாதிக்கப்பட்ட மக்களும் நோக்குகின்றனர். ஆனாலும் இந்த தமிழர் துயர் நினைவு கூறும் நாளினை இனவாதமாக சித்தரிக்கும் செயற்பாடுகளும், அதனை அரசியல் இலாபமாக மாற்றிக் கொள்ளும் செயற்பாடுகளும் நடைபெற்றன. தென்னிலங்கை அரசியல் வாதிகள் பலரின் கருத்து, முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மீண்டும் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கும் செயல்...

சற்று முன் நுணாவில் பொலிஸ் ஸ்ரேசன் வாசலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 வாகனங்கள் சேதம்(புகைப்படம் இணைப்பு )

சற்று முன் நுணாவில் பொலிஸ் ஸ்ரேசன் வாசலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 வாகனங்கள் சேதம் புகைப்படங்கள்  

இரணைதீவு மக்களை சந்தித்த யாழ். ஆயர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

சொந்த இடங்களில் தம்மை மீளக்குடியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி இரணைதீவு மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த மக்களை யாழ். ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று(17) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசசெயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இரணைதீவு மக்களின் காணிகளையும், வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள நிலையில் குறித்த மக்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெயர்ந்து நாச்சிக்குடாவில் இரணைமாதா நகரில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில்...

சிறையில் இருக்க வேண்டியவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிகிறார்கள்: யோகேஸ்வரன் எம்.பி

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க வேண்டியவர்கள் எமது மாவட்டத்திலே சுதந்திரமாக திரிகின்ற நிலையில், எமது உறவுகள் மாத்திரம் பல ஆண்டுகளாக சிறையிலிருந்து துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - வாகரைப் பிரதேசத்திலுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் பிள்ளையார் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமைடயில் நடைபெற்றதுடன், இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

தமிழர்களின் பலத்தை தெரிந்து கொண்டு போராட வேண்டும்: முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் நடைபெற்றன. இதில் த.தே.ம.முன்னணியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரையும் நிகழ்த்தியுள்ளனர். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில், நல்லாட்சி முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் சர்வதேசத்திற்கு தெரிந்தே நடைபெறுகின்றது. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று 8 வருடங்களாக தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றோம். ஐ.நாவில் ஏமாற்றப்பட்டோம், நல்லாட்சியிலும் ஏமாற்றப்பட்டுள்ளோம்,...

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிகால்வாய் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த நிகழ்வு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் இன்று(18) காலை நடைபெற்றுள்ளது. அத்துடன், வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகர் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றதுடன், இந்த படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும், தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், அப்பகுதியிலுள்ள 50ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு புதுக்குடியிருப்பு நகரில் சுடரேற்றி அஞ்சலி!

கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு  வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு நகரத்தில் சிறப்புற நடைபெற்றது. புதுக்குடியிருப்பில் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு நகரில் ஈகைசுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.   

மீண்டும் சேவை புறக்கணிப்புக்கு தயாராகும் மருத்துவர்கள்

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் உட்பட சில விடயங்களை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேவை புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சேவை புறக்கணிப்பில் ஈடுபட மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை, கைது செய்யப்பட்டமை, இலங்கை மருந்துச் சபை மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இதுவரை கைது செய்யாமை, மேலும், தொழிற்சங்க தலைவர்களை...