கிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடிகளை பறக்கவிட்டு யாழ்ப்பாணத்திற்கு தப்பி ஓடிய கும்பல்

541

கிளிநொச்சி நகரின் நடுவில் தனிச் சிங்கள கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

காலியில் இருந்து கிளிநொச்சிக்கு இன்று காலை பேருந்து ஒன்றில் வந்த “மஹாசேன் பலகாய சிங்கள கும்பல்” ஒன்று பெரும்பான்மையினரை பிரதிபலிக்கும் இந்த கொடியை பறக்கவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வரும் நிலையில், இவ்வாறு தனிச் சிங்கள கொடி பறக்கவிடப்பட்டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.மஹாசேன் பலகாய சிங்கள கும்பல், கிளிநொச்சி நகரின் மின்கம்பங்களில் இலங்கையின் தேசியக் கொடியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இரு நிறங்களும் அற்ற இலங்கை தேசியக் கொடிகளை பறக்கவிட்டு யாழ் நோக்கி தப்பி ஓடி உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments