தமிழர்களின் பலத்தை தெரிந்து கொண்டு போராட வேண்டும்: முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார்

298

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் நடைபெற்றன.

இதில் த.தே.ம.முன்னணியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரையும் நிகழ்த்தியுள்ளனர்.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில்,

நல்லாட்சி முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் சர்வதேசத்திற்கு தெரிந்தே நடைபெறுகின்றது.

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று 8 வருடங்களாக தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றோம். ஐ.நாவில் ஏமாற்றப்பட்டோம், நல்லாட்சியிலும் ஏமாற்றப்பட்டுள்ளோம், ஜி.எஸ்.பி.பிளஸ் விடயத்திலும் ஏமாற்றப்பட்டோம்.

இனியும் நாம் ஏமாற்றப்படாமல் இருப்பதற்கு இந்த அரசை விளங்கிக்கொண்டு செயல்பட வேண்டும்.

இலங்கையின் பூகோல அரசியலில் போட்டிகள் இடம்பெறுகின்றன. ஆனால் எமது தமிழர்களின் அரசியல் ஆழம் மற்றும் பலத்தை நாம் தெரிந்து கொண்டு போராட வேண்டும்.

மேலும், இந்த மே 18இல் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, புனித சின்னப்பர் ஆலயத்தில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய சிறப்பு பூஜைகளும் நடைபெற்றுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு – வாகரை பிரதேசசெயலாளர் பிரிவில் மாணிக்கபுரம் வாவிக்கரை ஓரத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments