மாணிப்பாய் கைதடி வீதியில் விபத்து- 63 வயதுடைய முதியவர் மரணம்!

கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்  பலியாகியுள்ளார். இன்று இரவு 7.00மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோப்பாய் சந்திக்கு அருகாமையில் பயணித்த கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கனரக வாகனத்தைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனர் தனது கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்தின் சக்கரங்களுக்குள் அகப்பட்டு பலியாகியுள்ளார். இந்த விபத்தில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த ரட்ணகோபால் எனும் 63 வயதான வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.    

லைக்கா மொபைல் நிறுவனம் தனது தொலைத்தொடர்புச் சேவைகளை இந்தியாவில் தொடங்கவுள்ளது.

லைக்கா மொபைல் நிறுவனம் தனது தொலைத்தொடர்புச் சேவைகளை இந்தியாவில் தொடங்கவுள்ளதாக லைக்கா குழுமத் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா தெரிவித்துள்ளார். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையம் இதற்கான அனுமதியை வழங்கியதும் நாம் இந்தியாவில் எமது தொலைத்தொடர்புச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார். இன்றையதினம் லைக்கா ஹெல்த்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவ மையம் சென்னை மாநகரில் திறந்து வைக்கப்பட்ட வைபவத்தின்போது செய்தியாளர்கள் மத்தியில் தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தினை லைக்கா குழுமத் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா குறிப்பிட்டார். கடந்த ஆண்டு, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மொபைல்...

பேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் தோழியை கொலைசெய்த 13 வயது சிறுவன்!!!

அர்ஜெண்டினா நாட்டில் பேஸ்புக் லைவ் நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கியை வைத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக சிறுமி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் உள்ள Santa Rosa de Calchines என்ற நகரில் தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காட்டுப்பகுதிக்கு அருகில் இந்நகரம் உள்ளதால் வேட்டையாடுவதற்காக பெரும்பாலன மக்கள் துப்பாக்கிகளை சொந்தமாக வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் குடியிருப்பு ஒன்றில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். இதனை ஒரு சிறுமி பேஸ்புக் லைவ் வீடியோவில் பதிவு செய்துள்ளார். அப்போது, 13 வயதான...

நல்லாட்சி: முல்லை இராணுவ தளபதியின் வழிநடத்தலில் தையல் பயிற்சி நிலையமாம்!!

முல்லைத்தீவில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடைத்தொழிற்துறை பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான கட்டளைத்தளபதி ஆகியோரின் வழிநடத்தலின் கீழ் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 150 இளைஞர் யுவதிகளுக்கு இப் பயிற்சி தொடர்பிலான நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்பட்டன. தெரிவுசெய்யப்பட்ட 35 பேருக்கு இங்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சேவைக்காகத் தனியார் ஆடைத்தொழிற்துறை நிறுவனம் ஒன்று முன்வந்துள்ள நிலையில், ஆடைத்தொழிற்துறையில் 300 பேருக்கு தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

முடிவுக்கு வந்தது விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியனிற்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு!!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசிய சுவீடன் அரசு வழக்கறிஞர்கள் குழு இயக்குனர் Marianne Ny இவ்வாறு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் 7 ஆண்டுகால சட்ட இழுபறி நிலை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 45 வயதாகும் அசாஞ்சே 2012ம் ஆண்டு முதல் அரசியல் புகலிடம் வழங்கப்பட்டு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வருகிறார். பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டில் தன்னை சுவீடனுக்கு நாடுகடத்தும் முயற்சியைத் தடுக்க அவர்...

அமெரிக்காவில் அதிக விலைக்கு ஏலம் போன ஓவியம்!!

அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் மறைந்த ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட் வரைந்த ஓவியம் ஒன்று 110.5 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் ஆயில் ஸ்டிக், அக்ரிலிக் மற்றும் ஸ்ப்ரே வகை பெயிண்ட்களை கொண்டு வரையப்பட்டபெயரிடப்படாத இந்த ஓவியம் இலங்கை மதிப்பில் சுமார் 1428 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஓர் மண்டையோடு வடிவை கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. ஜீன் மைக்கேல் பாஸ்குவேட்டின் இந்த ஓவியத்தை 41 வயதுடைய ஜப்பானிய பேஷன் தொழில்முனைவர் யுசாகா மேஸாவா ஏலத்தில் எடுத்துள்ளார். ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட்டின்...

விமானியாக இருந்து 20 ஆண்டுகளாக நாட்டில் ஆட்சி நடத்தும் மன்னர்!!!

இருபது ஆண்டுகளாக விமானியாக வேலை பார்த்துக் கொண்டே ஆட்சி பொறுப்பை நடத்தி வருவதாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். மன்னர் ஆட்சி இடம் பெறும் நெதர்லாந்தில் நாடாளுமன்ற முறைப்படியே ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது. மன்னர் நாட்டின் தலைவராக இருந்த போதிலும், அதிகாரங்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. நெதர்லாந்து நாட்டின் தற்போது மன்னராக இருப்பவர் வில்லியம் அலெக்சாண்டர். ராணியான பீட்ரிக்ஸ்(79) பதவி விலகியதால், வாரிசு அடிப்படையில் வில்லியம்ஸ் நாட்டின் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வில்லியம்ஸ் சமீபத்திய பேட்டியில், தான் 20 ஆண்டு காலமாக...

மீண்டும் போர்க் கப்பலை அனுப்பியது அமெரிக்கா!!!

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா தன்னுடைய இரண்டாவது போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகனை கொரிய தீபகற்ப பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள், ஜப்பான் கடலில் பராமரிப்பு மற்றும் கடலின் சோதனைகளை ஆராயந்த பின்னரே போர்க் கப்பல் கொரிய பகுதிக்கு அனுப்பப்பட்டது. இங்கு போர் விமானங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், போர் திறனை உறுதிப்படுத்தவும் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன்,...

காதலில் விழ ஆசையா? அப்போ இந்த நான்கு விடயங்களை கண்டிப்பாக மறக்காதீர்கள்..!

இப்போதுள்ள தலைமுறைக்கு முதிர்ச்சி கொஞ்சம் குறைவு தான். சில விஷயங்களில் அவர்கள் வளர்ந்தும் குழந்தையாகவே இருக்கிறார்கள். சிறு வயதில் நமது நண்பன் வீட்டில் ஏதாவது புதியதாக வாங்கினால், அதை நம் வீட்டிலும் வாங்க கூறுவோம். பதின் வயதில் அவன் சைக்கிள் போன்ற ஏதாவது வாங்கினால், “அது எனக்கும் வேணும்… என்று அடம்பிடிப்போம். ஆனால், பருவ வயதை கடந்த பின்னரும் கூட, இதே மனோபாவத்தை காதலிலும் கடைப்பிடிப்பது தவறு. ஏனெனில், காதல் தானாக நடக்க வேண்டிய ஒன்று. நாமாக தேடித் போகலாம், ஆனால் அது எந்நாளும்...

குழப்பவாதிகளால் முள்ளிவாய்க்கால் நிகழ்வின் அமைதியில் பாதிப்பு: சி.சிவமோகன் கண்டனம்

இன அழிப்பின் முடிவு நிலத்தில் அமைதியாக நடத்தப்பட்ட நிகழ்வு திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட வெளிமாவட்ட குழுக்களால் குழப்பியடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். அமைதியை குலைத்து அஞ்சலி நிகழ்வை அசிங்கப்படுத்தியவர்களை நான் பகிரங்கமாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். அரசியல் செய்ய வேண்டுமென்றால் பதவிகளை பிடிக்க ஆசையிருந்தால் மக்களிடம் செல்ல வேண்டும். கிராமங்களுக்கு செல்ல வேண்டும். அதை விடுத்து அமைதியான நிகழ்வுகளை குழப்பியடித்து பதவிகளை பிடிக்கலாம் என்றால் அது கானல் நீர் எனவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு எதிர்பார்ப்புக்களுடன் எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் இன்று கால் பதித்தனர். வெறுமனே அரசியல் அடிமைகளாக ஒரு...