அமெரிக்காவில் அதிக விலைக்கு ஏலம் போன ஓவியம்!!

177

அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் மறைந்த ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட் வரைந்த ஓவியம் ஒன்று 110.5 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் ஆயில் ஸ்டிக், அக்ரிலிக் மற்றும் ஸ்ப்ரே வகை பெயிண்ட்களை கொண்டு வரையப்பட்டபெயரிடப்படாத இந்த ஓவியம் இலங்கை மதிப்பில் சுமார் 1428 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

ஓர் மண்டையோடு வடிவை கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. ஜீன் மைக்கேல் பாஸ்குவேட்டின் இந்த ஓவியத்தை 41 வயதுடைய ஜப்பானிய பேஷன் தொழில்முனைவர் யுசாகா மேஸாவா ஏலத்தில் எடுத்துள்ளார்.

ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட்டின் முந்தைய மிகவும் விலையுயர்ந்த ஓவியத்தை காட்டிலும் இது கிட்டத்தட்ட இருமடங்கு விலையாகும்.

அமெரிக்காவை சேர்ந்த ஓவிய கலைஞர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக விலைக்குப் போன படைப்பாகும். அதுமட்டுமின்றி பல சாதனைகளையும் இந்த ஓவியம் முறியடித்துள்ளது.

1980ம் ஆண்டிலிருந்து 100 மில்லியன் டொலருக்கு அதிகமான தொகைக்கு ஏலம் போயுள்ள முதல் ஓவியம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

புகழ்பெற்ற ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட் தனது 28 வயதில் 1988ம் ஆண்டு மறைந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

Facebook Comments