அம்பத்தளை பாதை மண்ணுக்குள் புதையும் அபாயம்! மாற்றுப்பாதைகள் பயன்படுத்த அறிவுரை

118

அம்பத்தளை – தொட்டலங்க பாதை மண்ணுக்குள் புதையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொஹிலவத்தை பிரதேசத்தில் களனியாற்றுக்கு அருகாமையில் செல்லும் குறித்த பாதை ஓரிடத்தில் திடீர் என்று மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.

இதன் காரணமாக கொஹிலவத்தைப் பிரதேசத்தை அண்மித்த பகுதியில் இருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் பழைய அவிசாவளை பாதை உள்ளிட்ட மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கொழும்பில் நேற்றுப் பெய்த கடும் மழையின் காரணமாக இந்த பாதை மண்ணுக்குள் புதையும் அபாயம் ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.

Facebook Comments