ஐந்து வயது சிறுமிக்கு எமனாக மாறிய யானை!

196

அனுராதபுரம்-கல்கிரியாகம பகுதியில் காட்டு யானை தாக்கி ஐந்து வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆரம்ப பாடசாலைக்கு செல்லும் வழியிலேயே இந்த அனர்த்தம் இன்று காலை நேர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்,அனர்த்தம் காரணமாக உயிரிழந்த சிறுமியின் 52 வயது பாட்டி மற்றும்,ஒன்றரை வயது சகோதரி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக அந்தியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிருபமா லக்ஷானி மாரசிங்க என்ற 5 வயது சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments