கொழும்பில் கொட்டித் தீர்த்த அடைமழை! திணைக்களத்தில் ஏற்பட்ட விசித்திரம்

117

கொழும்பின் பல பகுதிகளில் நேற்றைய தினம் அடைமழை பெய்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் பெய்த அடைமழை, பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையால் பல பகுதியில் மின்சாரம் தடைபட்டதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

எனினும் கொழும்பு வளிமண்டலவியல் திணைக்களத்தின் டிஜிட்டல் திரையில் நேற்று 0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியையே காட்டியுள்ளது.

விசித்திரமான வானிலை தகவலை காட்டிய ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.

தினசரி வானிலை அறிக்கையை காட்டுவதற்காக குறித்த டிஜிட்டல் திறை பொருத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் துறையின் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது, சமீபத்தில் தானாவே பதிவாகும் காட்சி முடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தரவு தானாக புதுப்பிக்கப்படாதெவும், தாம் அதனை கைமுறையாக செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முதல் நாள் காணப்பட்ட வானிலை தரவுகளே நேற்றைய தினம் காட்சியளித்துள்ளது.

நேற்று முன்தினம் புதன் கிழமை கொழும்பில் மழை பெய்யாத நிலையில், அன்றைய தினம் காணப்பட்ட 0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியே நேற்றைய கடும் மழையின் போதும் காட்சியளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Facebook Comments