தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

94

தங்கொட்டுவ, வென்னப்புவ, மாரவில, கொஸ்வத்தை, கட்டான ஆகிய பிரதேசங்களில் தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவின் பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட 6 தங்கச் சங்கிலிகள் உட்பட தங்க ஆபரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Facebook Comments