தடையுத்தரவை மீறினால் கைது செய்யப்படுவீர்கள் ஒலி பெருக்கியில் அறிவித்த பொலிஸார்!!

774

 

நீதி மன்ற தடையுத்தரவை மீறி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த வேண்டாம் என்றும், மீறி நடத்தினால்  கைதுசெய்யப்படுவீர்கள் என்றும்  முல்லைத்தீவு பொலிஸார்  ஒலி பெருக்கி மூலம் இன்று அறிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய சூழலில் பல இடங்களில் நீதி மன்ற தடையுத்தரவும் பொலிஸார் பல இடங்களில் ஒட்டப்பட்டது.

அருட்தந்தை ஒருவராலும், பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயத்தின் அருகில் முள்ளிவாக்கால் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்விற்கு  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையிலே, நீதிமன்ற தடையுத்தரவை மீறினால் கைது செய்யப்படுவீர்கள் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments