நல்லாட்சி: முல்லை இராணுவ தளபதியின் வழிநடத்தலில் தையல் பயிற்சி நிலையமாம்!!

384

முல்லைத்தீவில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடைத்தொழிற்துறை பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான கட்டளைத்தளபதி ஆகியோரின் வழிநடத்தலின் கீழ் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 150 இளைஞர் யுவதிகளுக்கு இப் பயிற்சி தொடர்பிலான நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்பட்டன.

தெரிவுசெய்யப்பட்ட 35 பேருக்கு இங்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச் சேவைக்காகத் தனியார் ஆடைத்தொழிற்துறை நிறுவனம் ஒன்று முன்வந்துள்ள நிலையில், ஆடைத்தொழிற்துறையில் 300 பேருக்கு தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

Facebook Comments