பளையில் காவல்துறையினர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு!

7603

கிளிநொச்சி மாவட்டத்தின், பளைப் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட, ஏ-9 முதன்மைச் சாலையில், கச்சார்வெளிப் பகுதியில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

119 அவசர காவல்துறை இலக்க வாகனத்தினர் அதிகாலை 12.15 மணியளவில் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வீதியிலிருந்த பற்றைப் பகுதியிலிருந்து மூன்று துப்பாக்கி வெடிகள் கேட்டதாகவும் பளை காவல்துறையினர் தெரிவித்தனர். ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். எவருக்கும் இதன்போது காயங்கள் ஏற்படவில்லை என்றும், வாகனத்துக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

Facebook Comments