முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: ஒழுங்கு செய்தவர்களை தொடரும் பொலிஸார்

193

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கு செய்வதில் முன்னிலை வகித்த வணக்கத்திற்குரிய எழில் ராஜன் ஆண்டகையை வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

2009ஆம் ஆண்டு போரில் மரணித்தவர்களை நினைவுகூரும் நிகழ்வை ஒழுங்கு செய்தமை சம்பந்தமாக விசாரணை நடத்தவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக உள்ளக விசாரணை ஒன்றை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று விடுக்கப்பட்ட இந்த அழைப்புக்கு அமைய எழில் ராஜன் ஆண்டகை, சட்டத்தரணி மற்றும் மேலும் பங்கு தந்தையருடன் இன்று வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Facebook Comments