மைத்திரிக்கு யாழில் கால்பதிக்க அனுமதியில்லை – மஹிந்த!!

148

இராணுவத்தினர் உயிரைப் பணையம் வைத்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுத்தந்ததை இன்று பலர் மறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிரைப் பணையம் வைத்துப் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தற்போது உருவாகியுள்ள நிலைமை கவலைக்கிடமானது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் கால்பதிக்க அனுமதியற்ற ஒரு நிலையம் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்மலானை விகாரை ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Facebook Comments