லைக்கா மொபைல் நிறுவனம் தனது தொலைத்தொடர்புச் சேவைகளை இந்தியாவில் தொடங்கவுள்ளது.

195
லைக்கா மொபைல் நிறுவனம் தனது தொலைத்தொடர்புச் சேவைகளை இந்தியாவில் தொடங்கவுள்ளதாக லைக்கா குழுமத் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா தெரிவித்துள்ளார். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையம் இதற்கான அனுமதியை வழங்கியதும் நாம் இந்தியாவில் எமது தொலைத்தொடர்புச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார். இன்றையதினம் லைக்கா ஹெல்த்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவ மையம் சென்னை மாநகரில் திறந்து வைக்கப்பட்ட வைபவத்தின்போது செய்தியாளர்கள் மத்தியில் தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தினை லைக்கா குழுமத் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா குறிப்பிட்டார். கடந்த ஆண்டு, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மொபைல் வலையமைப்பு (MVN) திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளநிலையில் எமக்கான அனுமதி கிடைத்தும் நாம் மொபைல் வலையமைப்பு விரிவாக்கலை தொடங்குவோம் என்றும் அவர் கூறினார். மேலும் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச சிம் அட்டைகளை லைக்கா மொபைல் நிறுவனம் வழங்குகின்றது. லைக்கா மொபைல் நிறுவனம் 22 க்கும் அதிகமான நாடுகளில் பலலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதுடன் ரோமிங் கட்டணமற்ற சேவைகளையும் வழங்கிவரும் முன்னணி நிறுவனமாகும்.

Facebook Comments