வெள்ளவத்தை ஐந்து மாடிக் கட்டடத்தின் உண்மை நிலையை கண்டறிய விசேட குழு!

138

வெள்ளவத்தையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்பின் பேரில்,நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினர் இன்றைய தினம் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும்,சிக்குண்டுள்ள இருவரை மீட்கும் பணிகள் தொடந்தும் இரண்டாவது நாளாக முப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை,குறித்த கட்டட நிர்மாணிப்பு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில்,வீடமைப்புத் துறை அமைச்சரின் பணிப்பின் பேரில் நியமிக்கப்பட்ட இந்த குழுவினால் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Facebook Comments