யாழ். வாள்வெட்டு சந்தேகநபர் ‘சன்னா’ இந்தியாவில் கைது!

யாழில் இடம்பெற்று வந்த பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மூவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் யாழ். நகர்பகுதியைச் சேர்ந்த தேவா, டானியல், சன்னா ஆகிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதங்களில் யாழில் நடைபெற்ற மிகப்பெரிய கொலை, கொள்ளை மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில், நாட்டை விட்டுத் தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தனர். இவர்கள் குறித்து இந்திய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) கியூ பிரிவு பொலிஸாரால் இவர்கள்...

கிளிநொச்சியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு!!

கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி கைது செய்யப்பட்ட 4 பெண்களையும் எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் மன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி விநாயகபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்ட போது இதிலிருந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் மூவர் நேற்று கிளிநொச்சி நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டனர். மேலும்...

கிளிநொச்சியில் பட்டப்பகலில் குத்தி கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்! மனைவி சாட்சியம்!!

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார். குறித்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கிளிநொச்சி நீதிவான் மன்றில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போதே கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். “நாங்கள் கடைக்கு முற்பணம் கொடுத்திருந்தோம். கடையை மீள ஒப்படைத்துவிட்டு முற்பணமாக கட்டிய பணத்தை கேட்டோம். பணம் தராது அவர் இழுத்தடித்து வந்தார். கொலை நடைபெற்ற தினம் பகல் வேளையில் பணத்தை வாங்குவதற்காக நானும், கணவரும், மகளும் சென்றோம். அப்போது எம்மிடம் பணம் வாங்கவில்லை எனக் கூறிய...

முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான சுற்றுநிரூபம், விண்ணப்பம் வெளியீடு!!

2018 ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான சுற்றுநிரூபம் மற்றும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான அடிப்படைத் தகைமைகளின் படி, முதலாம் தரத்தின் சமாந்தர வகுப்பொன்றிற்காக மொத்தம் 38 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களின் ஐந்து பிள்ளைகள் யுத்த நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்ட முப்படைகள், பொலிஸ் உறுப்பினர்களின் பிள்ளைகளில் இருந்தும் தெரிவுசெய்யப்படுவார்கள்...

குறி தவறிய தாக்குதலால் சொந்த வீரர்கள் 11 பேரைக் கொன்ற பிலிப்பைன்ஸ் இராணுவம்!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகளைக் குறிவைத்து இராணுவம் நடத்திய வான்வெளி ஒத்திகைத் தாக்குதலில் குறி தவறியதால் சொந்த வீரர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மாராவி தீவு பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி கடந்த 8 நாட்களாக பொதுமக்கள் பலரை மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக பிலிப்பைன்ஸ் இராணுவம் கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஒத்திகையின் போது இராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட சிறிய ரக ஏவுகணைகள்...

இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது!!

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். இவர் தற்போது சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வருகின்றார். இவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளது, இமைக்கா நொடிகள் படத்தில் இவர் அதர்வாவிற்கு அக்காவாக நடிக்கின்றார் என கிசுகிசுக்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி அறம் படத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசுகின்றார், 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கின்றார். இவருடைய போட்டி நடிகைகள் கூட இத்தனை தைரியமாக எந்த கதாபாத்திரத்தையும் ஏற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் சமீபத்திய தைரியம் மற்றும் அதன் வெற்றியும் தான் நயன்தாராவை இன்னும் முதலிடத்தில்...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 217 குடும்பங்களை சேர்ந்த 874 பேர் பாதிப்பு!!

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 214 குடும்பங்களை சேர்ந்த 857 பேர் பாதிக்கபட்டுள்ளனர். 34 வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன். 12 முகாம்களில், 162 குடும்பங்களை சேர்ந்த 624 பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான அனர்த்த உதவிகளை நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. (இந்த புள்ளி விபரம் 02.06.2017 திகதி வரைக்குமானது) மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாலான பகுதியில் பாரிய முகில் கூட்டங்கள்...

பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள வவுனியா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்!!

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் மேற்கொண்டு வரும் வெள்ள நிவாரண பணிகளில் வவுனியா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் பங்களிப்பு செய்துள்ளனர். தொழில்நுட்ப கல்லூரி அதிபர் ஆ.நற்குனேஸ்வரனின் ஏற்பாட்டில் அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் தமது பங்களிப்பை பல வகையிலும் ஆற்றியுள்ளனர். வெள்ள நிவாரண பணிகளில் மாவட்ட சமூக சேவை அலுவலகம் ஈடுபட்டுள்ள நிலையில், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் முன்வந்து வீடுகளிலும், தனியார் நிறுவனங்களிலும் நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் இந்த செயற்பாடு பல பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அவர்கள்...

இலங்கையில் பிளாஸ்டிக் கோழிமுட்டைகள்! அதிர்ச்சி தகவல்!!

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கோழிமுட்டைகள் விற்பனையில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிளாஸ்டிக் முட்டைகள், காலாவதியான முட்டைகள் என்பவற்றை விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்குமாறு தென்கிழக்கு சுகாதாரப் பேரவை துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அம்பாறை மாவட்டப் பிரதேசங்களில் தற்போது போலி முட்டைகள், அதாவது பிளாஸ்டிக் முட்டைகள் மற்றும் காலாவதியான முட்டைகளும் தாராளமாக கிடைக்கின்றன, என்றும், முட்டைகளை வாங்கும் போது அவதானமாக இருக்குமாறும் அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடைமழை தொடரும் வாய்ப்பு! மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுரை!!

இலங்கையின் தென் மாகாணத்தை நிலை குலையச் செய்த அனர்த்த நிலை தற்போது வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுகிறது. எனினும் கடந்த நாட்களில் ஏற்பட்டிருந்த வெள்ளம் தற்போது குறைவடைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் காணாமல் போனோரை தேடு நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மத்திய நிலையத்தின் உதவி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் நாட்களில் அடைமழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...