தொடர்ந்தும் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குகின்றன!!(புகைப்படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு வட்டுவாகல் கடல்நீரேரியில் முகத்துவாரத்தில் இறந்த நிலையில் ஆயிரக்கணக்கில் மீன்கள் கரையொதுங்குகின்றன வட்டுவாகல் கடல் நீரேரி முல்லைத்தீவு பெருங்கடலை சேரும் இடத்தில் குறித்த மீன்கள் இறந்த நிலையில் ஒதுங்கிவருகிறது பல ஆயிரக்கணக்கில் இம்மீன்கள் இறந்து ஒதுங்குவது ஏன் என தெரியவில்லையென குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் இதேபோன்று 2015  ம் ஆண்டும் மீன்கள் இவ்வாறு இறந்து ஒதுங்கியதாகவும் தெரிவிக்கும் வட்டுவாகல் கடற்தொழிலாளர் சங்க மீனவர்கள் இறந்த மீன்களை நீரேரியில் இருந்து  அகற்றி குழிகள் வெட்டி தாட்டுவருகின்றனர்  

வறட்சியால் முல்லைத்தீவில் 115020 பேர் பாதிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை நீடித்துவரும் வரட்சி காரணமாக  35670 குடும்பங்களை சேர்ந்த 115020 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன அண்மைக்காலமாக முல்லைத்தீவில்  காணப்படும் கடும் வடச்சி காரணமாக கரைதுறைப்பற்று புதுக்குடியிருப்பு மணலாறு ஒட்டுசுட்டான் துணுக்காய் மாந்தை கிழக்கு ஆகிய ஆறு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 35670 குடும்பங்களை சேர்ந்த 115020 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன இதனடிப்படையில் அதிகம் பாதிக்கப்பட்டு குடிநீர் வசதியின்றி தவிக்கும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில்...

முல்லைத்தீவில் தூள் அரைக்கும் இயந்திர வழங்கி வைப்பு!!

02/06/2017 இன்று கைவேலி கிராமத்தில் பெண் தலைமை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு "வேள்ட்விசன், " நிறுவனத்தின் நிதியுதவியுடன் தூள் அரைக்கும் இயந்திர வழங்கப்பட்டது இதன் போது புது / மேற்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு K:பிரபாகரன்(பிரபா) அவர்களும் கலந்து கொண்டு பயனாளியிடம் வழங்கி வைத்தார்

புதுக்குடியிருப்பு காணிகள் உறுதிமொழி வழங்கப்பட்டதுபோல் விடுவிக்கப்படுமா ?

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னாலுள்ள காணிகளில் இரண்டாம் கட்டமாக 3 மாதத்தில்  விடுவிக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்ட காணிகள் ஆணி மாதம் 4  ம் திகதி விடுவிக்கப்படுமா என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது கடந்த தை மாதம் 31 ம் திகதி பிலவுக்குடியிருப்பில் மக்கள் நிலமீட்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். அதனை தொடர்ந்து மாசி மாதம் 4 ம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால்  பொன்னம்பலம் மருத்துவமனை அமைந்திருந்த காணி உள்ளடங்கலாக காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர் போராட்டம்...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு கிளிநொச்சியிலிருந்து நிவாரண பொருட்கள்!!

நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்காக கிளிநொச்சியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகமும், பிரதேச செயலகங்களும் இணைந்து கிளிநொச்சி வாழ் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் வழங்கிய உணவுப்பொருட்களை நேற்று (01) கையளித்துள்ளனர். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் தலைமையில் சென்ற உத்தியோகத்தர்கள் நிவாரண பொருட்களை காலி மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளனர். இதன்போது, உலர் உணவு, மருத்துவ பொதிகள் மற்றும் ஆடைகள் உட்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதிக்கு மேற்பட்ட நிவாரணப்பொருட்கள் மூன்று பார ஊர்திகளில் எடுத்து செல்லப்பட்டன. குறித்த பெருந்தொகையான நிவாரணப்பொருட்களை...

மூதூரில் மூன்று சிறுமிகள் வன்புணர்வு சம்பவம்: 32 பாடசாலைகள் இயங்கவில்லை!!

மூதூர் பெரியவெளிக் கிராமத்தில் சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து மூதூர் மற்றும் ஈச்சிலம்பற்றுக் கோட்டங்களில் 32 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காது இன்றும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மூதூர் கோட்டத்தில் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும், ஈச்சிலம்பற்றுக் கோட்டத்தில் 18 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்களும் ஆசிரியர்களும் மாத்திரமே பாடசாலைகளுக்கு சமூகமளித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள்...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியாசலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்களை நியமிக்க அனுமதி!!

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்களை நியமிப்பதற்கான வைத்திய அனுமதியினை மத்திய சுகாதார அமைச்சிற்கு வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அனுமதியினை இலங்கை மருத்துவ சபை கடந்த வாரம் வழங்கியுள்ளதாக குறித்த தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. வடமாகாணத்தில் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே மருத்துவர்கள் உள்ளகப் பயிற்சிக்காக (Internship) நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுகாதார அமைச்சின் தகவல்கள் மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் உள்ளகப் பயிற்சிக்காக மருத்துவர்கள் நியமிக்கப்படலாம் என...

நீண்டகாலமாகத் யாழில் திருத்தப்படாத வீதி!! திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை!!

யாழ். வலி கிழக்குப் பிரதேசசபைக்கு உட்பட்ட உரும்பிராய் கிழக்கு விளாத்தியடி வீதி போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சுமார் இரண்டு கிலோ மீற்றர் நீளமான இந்த வீதியில் பெரும்பாலான இடங்களில் குன்றும், குழிகளும் காணப்படுவதால் இந்த வீதியால் போக்குவரத்துச் செய்வோர் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். குறித்த வீதி நீண்ட காலமாகத் திருத்தப்படவில்லை எனச் சுட்டிக் காட்டும் அந்த பகுதிப் பொதுமக்கள் இது தொடர்பில் பல தடவைகள் தாங்கள் வலி.கிழக்குப் பிரதேச சபையின் செயலாளரிற்குச் சுட்டிக் காட்டி கோரிக்கைகள் அடங்கிய...

முல்லைத்தீவு வலய மட்ட வினாடி வினா போட்டியில் 1ம் இடம்!!(புகைப்படம் இணைப்பு)

முல்லைத்தீவு வலய மட்ட வினாடி வினாப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலைகளில் மு/விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 1ம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் மாகாண மட்டத்திலும் வெற்றி பெற முல்லைத்தீவு வலய ஆரம்பக் கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முன்பள்ளி விளையாட்டுப்போட்டி!!

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு திம்பிலி கர்ணன் குடியிருப்பு முன்பள்ளி விளையாட்டுப்போட்டி நிகழ்வில் வடமாகணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் அவர்கள் சிறப்புவிருந்தினராக சிறப்பித்துள்ளார்