சற்று முன் லண்டனில் மீண்டும் தாக்குதல்: 12 இஞ்சி கத்தியால் 22 பேரை குத்திய 3 நபர்கள்

சற்று முன் லண்டன் பிரிஜ் க்கு அருகாமையில், தீவிரவாத தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 3 மொராக்கோ நாட்டவர்கள் 12 இஞ்சி கத்திகளை கொண்டு பொதுமக்களை ஓட ஓட தாக்கி குத்தியுள்ளார்கள். இதேவேளை வெள்ளை நிற வேன் ஒன்றையும் அவர்கள் ஓடிச் சென்று மக்கள் மீது இடித்துக் கொல்லவும் முற்பட்டுள்ளார்கள். அங்கே பலத்த துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும். தாம் ஓடி தப்பியதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ள நிலையில். ஆயுதம் தாங்கிய பொலிசார் அங்கே குவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சுட்டதில் குறித்த மூவரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும்...

பிரித்தானியாவில் மீண்டும் பயங்கரம்…மக்கள் மீது தாறுமாறாக மோதிய வாகனம்

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள பாலம் ஒன்றில் வாகனம் ஒன்று தாறுமாறாக ஓடியதால், அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதியுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது வகனத்தினால் நடந்து விபத்து அல்ல துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீர் சம்பவத்தால் பொலிசார் அங்கு விரைந்துள்ளதுடன், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும், அடிபட்டிருக்கும் மக்கள் இரத்தக் காயங்களுடன் கண்ணீருடன் நடந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த கொடூரம்!! ரயிலில் பாய்ந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை!!

பொடி மெனிக்கே ரயில் பாய்ந்து பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். பேராதனை பல்கலைகழகத்தில் கற்க்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  

கனகராயன்குளம் பாடசாலை அதிபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்!!விளக்கமளிக்க அதிபர் மறுப்பு!!

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் உயர்தரம் கற்று வந்த மாணவனான தர்மராசா ஜனார்த்தனன் ஆசிரியர் தாக்கியதில் மனமுடைந்து (31-05-2017) அன்று தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து பாடசாலையின் அதிபர் மீது மாணவர்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. பாடசாலையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வின்போது உயர்தர மாணவனான ஜனார்த்தனனை தாக்கிய ஆசிரியர் தரம் 5 இலிருந்து தரம் 1 வரைக்கும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சித்திரம் பாடங்களை கற்றுக்கொடுப்பவரென்றும் அந்த ஆசிரியர் உயர்தர மாணவனை தாக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் குறிப்பிட்ட ஆசிரியர் ஏற்கனவே...

​வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்ட இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்!!

வவுனியாவில்  போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (03.06.2017) 100வது நாளாகவும் மழை, வெயில் என்பவற்றை பெருட்படுத்தாது தற்காலிக தகரக் கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிவநேசன், தியாகராஜா ஆகியோர் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடினர். இதன்போது தீர்வு கிடைக்கும் வரை இவ் சுழற்சி முறையிலான...

கஞ்சா எண்ணெய்யால் உயிர் பிழைத்த சிறுமி:மருத்துவ துறையில் ஓர் மைல்கல்

அமெரிக்காவில் கொடிய நோயால் உயிருக்கு போராடிய சிறுமி ஒருவருக்கு கஞ்சா எண்ணெய் மூலம் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரிசோனா மாகாணத்தில் உள்ள டஸ்கான் நகரில் Annalise Lujan(12) என்ற சிறுமி வசித்து வருகிறார். பள்ளிக்கு சென்ற வந்த சிறுமி கடந்த சில மாதங்களாக சோர்வுற்று காணப்பட்டுள்ளார். மேலும், கை-கால்களை இழுத்துக்கொள்ளும் வலிப்பு நோயும் அவரை தாக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வினோதமான நோயால் சிறுமி உயிருக்கு ஆபத்து இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பின்னர், சிறுமிக்கு பல்வேறு கட்டங்களாக சிகிச்சை அளித்த...

யாழ்.வாள்வெட்டு குழுவினரிடம் இந்திய புலனாய்வு கியூ பிரிவினர் தீவிர விசாரணை!

யாழில் வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேவா, பிரகாஸ் மீது இந்திய புலனாய்வு கியூ பிரிவினர் தொடர்ச்சியான தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குறித்த நபர்களுக்கு எதிராக இலங்கை பொலிஸாரால் எந்தவித அழுத்தங்களும் இதுவரை பிரயோகிக்கப்படவில்லை என இந்தியாவில் இருந்து கியூ பிரிவு பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா திருச்சியில் சந்தேகத்துக்கிடமான முறையில் தங்கியிருந்த நிலையில் யாழ். பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேவா, பிரகாஷ் உட்பட மூன்று பேர் கடந்த 30ம் திகதி செவ்வாய்க்கிழமை கியூ...

திருகோணமலை சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவு!மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை - மூதூர் – மல்லிகைத்தீவில் பாடசாலை மாணவிகள் மூவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய சந்தேக நபர்களுக்கு எதிராக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகக் கூடாது என கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படாத காரணத்தினாலேயே இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திருகோணமலை - மூதூர் – மல்லிகைத்தீவில் பாடசாலை மாணவிகள் மூவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு...

வவுனியாவில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்து!! 4 பேர் படுகாயம்!!

வவுனியாவில் இன்று முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் படுகாயமடைந்த நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, லக்சபான வீதியிலிருந்து வவுனியா புகையிரத நிலையம் நோக்கி நால்வரை ஏற்றி வந்த முச்சக்கரவண்டி வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வருமே காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக முச்சக்கரவண்டியின் சாரதி தெரிவிக்கையில், லக்சபான வீதியிலிருந்து புகையிரத நிலையம் நோக்கி பயணித்தேன். கடும் காற்று வீசியதால் முச்சக்கரவண்டி எனது கட்டுப்பாட்டை இழந்து குளக்கட்டில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது என கூறியுள்ளார். மேலும்,...

பல்லவராயங்கட்டு சந்தி அருகில் சற்று முன் பாரிய விபத்து தடம் புரண்டது வாகனம்!!(புகைப்படங்கள்)

சற்று முன் பல்லவராயங்கட்டு சந்தி அருகில்  வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது அந்த விபத்தில்  ஒருவர் காயம் அடைந்துள்ளார் மற்றும் வண்டி தடம் புரண்டு சேதத்துக்குள்ளாகியுள்ளது.