மருந்துகள் தெளிக்கப்படுவதால் தான் மீன்கள் உயிரிழக்கின்றன!!

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியின்போது  தெளிக்கப்படும் மருந்துகள் காரணமாகவே மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக குறித்த பகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குகின்றன. முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்கரையில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதால் அப்பகுதி மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சட்டவிரோத மீன்பிடி காரணமாகவே மீன்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கும் மீனவர்கள், மீன்கள் இறந்து கரையொதுங்குவதால் தமது வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தனர். இதுமாத்திரமன்றி குறித்த பகுதியை ஆழப்படுத்தி தருமாறு தாம் பல தடவைகள் வலியுறுத்தியபோதும், இதுவரை அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை...

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் சற்று முன் விபத்து இருவர் படுகாயம்!!

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் சற்று முன் Tata208 ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியது இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும்  காயமடைந்துள்ளனர் இவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.  

லண்டன் பிரிட்ஜ் – பரோ மாக்கெற் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் 12 பேர் கைது!!

லண்டன் பிரிட்ஜ், மற்றும் பரோ மார்கெற் பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிழக்கு லண்டன் பாக்கிங் மாடிக் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக மெட்ரோ பொலிற்றன் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை மெட்ரோ பொலிற்றன் பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்பு கட்டளைப் பிரிவினர், பாக்கிங் பகுதியில் நடத்திய விசேட தேடுதலின் போது, தாக்குதல்தாரிகளுடன் தொடர்பில் இருந்ததான சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...

இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி!!

இலங்கையில் பிளாஸ்டிக்கில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் நிலவிய கடும் வறட்சி நிலையை அடுத்து, நிவாரணமாக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட அரசியில் இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது. புறக்கோட்டை சதொசவில் விற்பனை செய்யப்பட்ட அரசி வகை ஒன்று தொடர்பில் தற்போது பேஸ்புக் பக்கங்களில் சில காணொளிகள் வெளியாகியுள்ளது.பாஸ்மதி அரிசி கொள்வனவு செய்த பெண்ணொருவர் அதனை சமைத்த பின்னர் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சோறு சமைத்து 24 மணித்தியாலங்கள்...

கடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று(05.06.2017) தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 12ம் திகதி திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெறவுள்ளது. இந்த உற்சவத்தின் முன் நிகழ்வான தீர்த்தமெடுக்கும் நிகழ்வு இன்று(05.06.2017) நந்திக்கடலில் இடம்பெறுகின்றது. தீர்த்தம் எடுக்கப்பட்டு காட்டு விநாயகர் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விளக்கேற்றப்படும். தொடர்ந்து ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டா விநாயகர்...

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்புக்கு தோல்வி!!

அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை நீருபிக்க முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தோல்வி கண்டுள்ளது. இந்த தோல்வி அடுத்துவரும் அடுத்து வரும் அரசியல் தீர்விலும் பிரதிபலிக்கும். இதற்கு இடம் கொடுக்கக் கூடாதெனவும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். நியு மகஸீன் சிறையிலுள்ள அரசியல் கைதிகளை நேற்று வெள்ளிக்கிழமை காலை வண பிதா.எஸ்.நந்தன மற்றும் மா.சக்திவேல் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின் போதே அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு தெரிவித்ததாக மா.சக்தி நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை. என்பது தான் அரசாங்கத்தின்...

குழந்தையைக் கொன்ற தாய்க்கும் கள்ளக் காதலனுக்கும் மரண தண்டனை!!

மூன்று மாத குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை வாழைத்தோட்டத்தில் புதைத்த சம்பவத்துடன் தொடர்புடைய, கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக் காதலன் ஆகியோருக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல் ரண ராஜா மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கொஸ்வத்தை ஹால்நடுவன பகுதியிலுள்ள ஒட்டுத்தொழிற்சாலையில் வசிக்கும் இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கு தாயைத் தேடி சைக்கிளில் வந்த யாழ்ப்பாணத்து சிறுவன் மீட்பு!!

கொழும்பில் பணிபுரியும் தனது தாயைத் தேடி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்த சிறுவன் ஒருவன் சிங்களப்பிரதேசத்தில் வைத்து அதிகாலை நேரம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளான். கடந்த 28 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர் கொழும்பு கொச்சிக்கடை நகரத்திலிருந்து சிறுவன் ஒருவர் அதிகாலை 3 மணியளவில் சைக்கிளில் சென்றுள்ளான். சந்தேகம் கொண்ட நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் தனது காரை அந்த சைக்கிளுக்குப் பின்னால் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் செலுத்தியுள்ளார். தோப்புவ பாலத்துக்கு அருகில் சோதனைச்...

19 வயது இளம் தாய் எரிக்கப்பட்டு கொலை தலைமறைவாயிருந்த கணவன் கைது!!

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லாந்தலுவ பகுதியில் 19 வயதான இளம் தாய் ஒருவர் எரியூட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டு புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுரங்குளி பகுதியில் கது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவானினால் உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டுள்ளது. நல்லாந்தலுவப் பகுதியில் கணவரால் எரியூட்டப்பட்ட 19 வயது குடும்பப் பெண்ணான ரீ.சாமிலா புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி...

முல்லைத்தீவு பொலிஸாரால் வெடி மருந்துடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்!!

தடை செய்யப்பட்ட அதிசக்தி வாய்ந்த ஜெனட்டின் மருந்துகுச்சிகள் இருப்பதை பேருந்தில் எடுத்து சென்ற குற்றச்சாட்டில் முல்லைத்தீவு நீதிவான் எஸ்.எஸ்.எம்.சம்சுதீன்  நேற்று முன் தினம் உத்தரவிட்டார். புதன் கிழமை முல்லைத்தீவில் இருந்து சிலாவத்துறை பகுதியூடாக பயணிக்கும் பேருந்தில் இருவர் வெடி மருந்து குச்சிகளை எடுத்து செல்வதாக பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. இதனையடுத்து குறித்த பேருந்து மறிக்கப்பட்டு பொலிஸாரினால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது 20 வெடி மருந்து குச்சிகளை வைத்திருந்த 22 மற்றும் 25 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். நேற்று முன் தினம் இருவரையும் முல்லைத்தீவு நீதிமன்றில்...