மரணித்துப்போனது ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் நாத ஓசை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இசைக்கப்படும் பக்தி கீதங்கள் அதிகாலை ஜந்த மணிக்கு ஒலிபரப்ப தடை போடப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தொண்டர் கழகம் என்று ஒரு கழகத்தை நடத்துகின்ற ஒரு வைத்திய அதிகாரியின் தந்தையும் வைத்திய அதிகாரியும் கோவிலில் பாடல்கள் ஒலிபரப்புவதால் தங்கள் அன்றாட வாழ்கையில் பல இன்னல்கள் ஏற்படுவதாகவும் தாம் நிர்வகிக்கின்ற மருத்துவமனை நோயாளர்களைப் பாதிப்பதாகவும் இலங்கைப் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் ஊடாக தடையை ஏற்ப்படுத்தியுள்ளனர். இது விடயமாக தெரியவருவதாவது, தனியுடமைக் குடும்பக் கோவிலாக உள்ள இவ் ஆலய நிர்வாக் கட்டமைப்புக்கள், இக் கோயில்...

தினமும் 2 நிமிடம் பாத்ரூமில் கணவன் செய்த காரியம்… 100 கோடி நஷ்டஈடு வாங்கிய மனைவி!!

என்னது ஒழுங்கா குளிக்கவில்லை என்றால் நூறு கோடி அபராதமா..!? இதுல கடைசியில் தாங்க சுவாரசியமான கதை இருக்கிறது பொறுமையாக படிங்க..! குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும். உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா..! நிச்சயம் கிடையாது..! சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா….? குளியல் = குளிர்வித்தல் குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும்...

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வானுடன் மோதி இளைஞர்கள் இருவர் படுகாயம்!!

மட்டக்களப்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் வைத்து மோட்டார் சைக்கிள் வானொன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வானை திருப்ப முனைந்த போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வானின் மீது மோதுண்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த இளைஞர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் இன அழிப்பிற்கு வழிவகுக்கும்!!

சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 94ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த பிரேரணையை சபைக்கு கொண்டு வந்தார். பிரேரணையை சபைக்கு கொண்டு வந்து அவர் கருத்து தெரிவிக்கையில், எண்ணிக்கையில் சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை இன்றும் அதிகாலையில் நுகேகொடை பகுதியில் முஸ்லிம்...

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் மீது கண்டனம்: ப.சத்தியலிங்கம்!!

அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்திக்குறிப்பில், வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினது அறிக்கை என்னிடம் கையளிக்காத நிலையில் அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு செய்தியை நான் வழங்கியதாக சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகி உள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றேன். கடந்த மாதம் 22...

முல்லைத்தீவு பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கிணறு கையளிப்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வள்ளிபுரம் பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வி.ரஜனிதேவி என்பவருக்கு வட்டுக்கோட்டை வாலிபர் சங்கத்தினால் கிணறொன்று அமைத்து கையளிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விண்ணப்பதாரி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 141,000 ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கிணறு நேற்று கையளிக்கப்பட்டது. இந்து வாலிபர் சங்கத்தின் முன்னாள் உறுப்பினரும் யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய இராஜசிங்கம் பிரசாந்தனால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. மேற்படி விண்ணப்பதாரி தனது வேண்டுகோளில், முல்லைத்தீவில் 2009ஆம் ஆண்டு நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் போது எறிகனை தாக்குதலில் எனது கணவர்...

சீரான போக்குவரத்து வசதிகளின்மையால் அவதியுறும் முல்லைத்தீவு பிரதேச மக்கள்!!

முல்லைத்தீவு கோட்டை கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளம் போன்ற பகுதிகளில் சீரான போக்குவரத்து வசதிகள் இன்மையால் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அங்கு வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள அமைதிபுரம், அம்பலப்பெருமாள் குளம், கோட்டைகட்டியகுளம், தென்னியங்குளம், உயிலங்குளம், வேட்டையடைப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கான பிரதான வீதியாக காணப்படும் துணுக்காய், அம்பலப்பெருமாள் சந்திவரைக்குமான வீதி கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு ஒரு பேருந்து மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள...

அடிப்படை வசதிகளின்றி சிரமங்களை எதிர்நோக்கும் முல்லைத்தீவு மக்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை பிரதேச கிழக்கு பாலைப்பாணி, கொம்புவைத்த குளம் பகுதி மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமையினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு 17.5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பனங்காமம் சென்றோ அல்லது 16.5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள துணுக்காய் மாங்குளம், வீதியின் மூன்று முறிப்பு சந்திக்கு சென்றோ அதில் இருந்து போக்குவரத்தினைப்பெற்று மாங்குளத்திற்கு செல்ல வேண்டிய...

முல்லைத்தீவு துவரங்குளத்தினை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கும் மக்கள்!!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு துவரங்குளம் பிரதேசத்தின் காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக தங்களிடம் கையளிக்குமாறும் துவரங்குளத்தினை புனரமைத்து தருமாறும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள வன்னிவிளாங்குளம், அம்பாள்புரம் விவசாயிகள் மிக நீண்டகாலமாக பயிர் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த காலத்தில் யுத்தத்தினால் கைவிடப்பட்டு பற்றைக்காடு மண்டிக் காணப்பட்ட துவரங்குளம் வயல் நிலங்கள், மீள்குடியமர்வின் பின்னர் துப்பரவு செய்யப்பட்டுள்ள போதும் இதுவரை விசாயச் செய்கைகளுக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்படவில்லை. இக்காணிகளை தங்களின் பயிர் செய்கைகளுக்கு வழங்குமாறும் துவரங்குளத்தினை புனரமைத்து...

கல்யாணம் முதல் காதல் வரை பிரியா ரசிகர்களா நீங்கள்?? இந்த சூப்பர் நியூஸ் உங்களுக்கு தான்!!

சந்தானம், சிவகார்த்திகேயன் என பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து நடிகர்களாக உயர்ந்திருக்கின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ப்ரியா பவானி ஷங்கர். பின்னர் பிரபல ரிவியில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து எல்லோருக்கும் பிடித்த நடிகையாகிவிட்டார்.  பின்னர் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார். இந்நிலையில், தனது படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள ப்ரியா, விரைவில் திரைப்படம் ஒன்றில் நடிகையாக...