கிளிநொச்சியில் இரண்டாவது நாளாக ஊடகவியளாளர்களுக்கான பயிற்சிநெறி!!

வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களை சார்ந்த ஊடகத்துறையில் பணிபுரிகின்ற  மற்றும் ஊடகத்துறையில் பணிபுரிய ஆர்வமுடையவர்களும் ஊடகத்துறை தொடர்பான கல்வியை பயின்று வருபவர்களுமாக 50 பேருக்கான இரண்டு நாள் வதிவிட ஊடக செயலமர்வு ஒன்று நேற்றைய தினம் 07/06/2017 அன்று கிளிநொச்சி மகாதேவா சைவ சிறுவர் இல்லத்தில் இனிதே ஆரம்பித்து இன்று இரண்டாவது நாளாக செயலமர்வு தொடர்ந்து இடம்பெற்று அதன் பின்னர் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பெருமதியான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.  

மைத்திரியின் திடீர் நடவடிக்கை!

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் சமகால அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலை நீடித்தால் அதனை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் இராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து திட்டமிட்ட வகையிலும் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களை கட்டுபடுத்துவதற்கு பொலிஸாரால் முடியவில்லை என்றால் இராணுவத்தை களமிறக்கி நிலைமை கட்டுப்பாட்டுக்குள்...

நோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல்!

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள்...

கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி:இலங்கைக்கும் பாதிப்பு?

கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படும் என சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சமகாலத்தில் வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இலங்கையின் சுற்றுலா துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார். கட்டார் நாட்டு விமான சேவையின் ஊடாக இலங்கை பாரியளவில் வருமானத்தை பெற்று வருகிறது. தற்போதைய நெருக்கடியால் இலங்கையில் ஏற்படும் பாதிப்பை குறைத்து கொள்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வளைகுடா பிரச்சினை நீடிக்குமாயின் கட்டாரில் வாழும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர வேண்டும். இலங்கையில் வெளிநாட்டு நாணய மாற்று பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பு...

கொழும்பை அதிர வைத்துள்ள கொள்ளைகுழு! மக்கள் அவதானம்

கொழும்பில் வாகனங்களில் கொள்ளையடிக்கும் மாணவ குழுவொன்றை மிரிஹான விசேட குற்ற விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வாடகை வண்டி சேவை சாரதிகளுக்கு கத்தியை காட்டி அச்சுறுத்தி அவர்களிடம் இருக்கும் தங்க ஆபரணம், கையடக்க தொலைபேசி மற்றும் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் பிரபல பாடசாலைகளை சேர்ந்த மூன்று மாணவர்கள் இவ்வாறு குழுவாக செயற்பட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட 6 கையடக்க தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகநபர்கள் கொள்ளையடித்த பொருட்களின் பெறுமதி சுமார் 6 லட்சத்திற்கும் அதிகம் என குற்ற...

சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு…!

சிறுநீரக நோயாளிகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   அந்த வகையில் மாதாந்தக் கொடுப்பனவுத் தொகை ரூபா 3000 வில் இருந்து ரூபா 5000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு தற்போது அரசாங்கத்தினால் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் சற்றுமுன்னர் சுற்றுலா வந்த இளைஞர்குழு மீது வாள்வெட்டு தாக்குதல் முயற்சி!

கிளிநொச்சி நகர பகுதியில் சற்றுமுன்னர் வாள்வெட்டு தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.தென்பகுதியிலிருந்து உந்துருளிகளில் சுற்றுலா வந்த இளைஞர்குழுவினரின் உந்துருளியின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது . கிளிநொச்சி நகர பகுதியில் வீழ்ந்து காணப்படும் நீர்த்தாங்கியை பார்வையிடுவதற்காக வருகைதந்த குழுவினர் உந்துருளிகளை வீதியோரமாக நிறுத்திவிட்டு சென்ற சமயம் அங்குவந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் காரணமாக தற்போது கிளிநொச்சி நகர் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி...

இயற்கை காடுகளை மையப்படுத்தி சீனாவுடன் மற்றுமொரு புதிய ஒப்பந்தம்!

வன வள பாதுகாப்பு மற்றும் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் சீனாவுடன் புதிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இரு நாடுகளும் தமக்குறிய அரிய வகை வளங்களை பரிமாறிக் கொள்ளவும் ஆய்வுகள் மற்றும் பயிற்சிகளுக்கு  பயன்படுத்தவும் முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றி ; இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடுகிறது – நேரடி ஒளிபரப்பு

சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்­டத்தில் இலங்கை – இந்­திய அணிகள் இன்று மோது­கின்­றன.   இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கவுள்ளது. ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இங்­கி­லாந்தில் நடை­பெற்று வரு­கி­றது. இந்­தப்­போட்­டியில் 8 நாடுகள் பங்­கேற்று விளை­யாடி வரு­கின்­றன. அவை இரண்டு பிரி­வுகளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. இதில் இலங்கை அணி ‘பி’ பிரிவில் உள்­ளது. தென்­னா­பி­ரிக்காஇ பாகிஸ்தான்இ இந்­தியா ஆகிய நாடு­களும் அந்த பிரிவில் உள்­ளன. இந்­நி­லையில்...

பிரித்தானிய தேர்தல்:பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

கடந்த இரண்டு வாரங்களில் இருவேறு பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட பிரித்தானிய மக்கள் இன்றைய பொதுத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக இந்த வாக்கெடுப்பு இடம்பெறுகின்றது. தேர்தலுக்கு முன்னதான கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் பிரதமர் தெரேசா மே வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் பயங்கரவாத அச்சுறுத்தல், சமத்துவமின்மை, பொருளாதாரம், பிரெக்சிற் விவகாரம் என தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் உறுதிமொழிகளுக்கு அமைய மக்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்களிக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு எதிர்பார்புடனேயே வாக்களிக்கின்றனர். பிரித்தானியாவில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள...