ஒட்டிசுட்டான் கருவேலன் கண்டல் பாலம் முதலமைச்சரால் திறந்து வைப்பு!!

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருக்கும் கருவேலன் கண்டல் பாலமானது வடக்கு முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் அவர்களால் நாடாவை வெட்டி திறந்து வைக்கப்பட்டது. அந்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

முகப்பரு தழும்புகளால் அவதிபடுகிறீர்களா? கவலை வேண்டாம்.. இதோ ஈசியான தீர்வு!!

முகப்பரு தழும்புகளால் அவதிபடுகிறீர்களா?கவலை படாதீர்கள் அதனை போக்குவதற்கு இருக்கவே இருக்கு இந்த வழிகள்! முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை! ஆனால் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன. வெந்தயம்! முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும். அல்லது மெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும்....

விளக்கினைத் தூண்டினால்த்தான் வெளிச்சத்தினை அதிகரிக்கலாம் அல்லது பிரகாசத்தினை கூட்டி அந்த பிரதேசத்தினை ஒளிமயமாக்கலாம்…..!!!சுகுணன்!!

விளக்கினைத் தூண்டினால்த்தான் வெளிச்சத்தினை அதிகரிக்கலாம் அல்லது பிரகாசத்தினை கூட்டி அந்த பிரதேசத்தினை ஒளிமயமாக்கலாம் என்பதன் அடிப்படையில் பெத்தான்குடி மக்கள் எடுக்கும் சமயத்துடன் கூடிய சமூக நிகழ்வானது பாராட்டுக்குரியதொன்றாகும் என களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சுகுணன் தெரிவித்துள்ளார். எருவில் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக பெத்தான்குடி மக்கள் மகுடம் சூட்டும் மகிழ்ச்சி பெருவிழா ஆலய வெளி வீதியில் பெத்தான் குடி தலைவர் முன்னாள் மரணவிசாரணை அதிகாரி சா.பேரின்பநாயகம் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு...

கிளிநொச்சி ஆலயங்களில் கைவரிசையை காட்டிய நால்வருக்கு விளக்கமறியல்!!

கிளிநொச்சியில் ஆலயங்களில் கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. குறித்த நான்கு பேரையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில்ஆஜர்படுத்தியதையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. புத்தளத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வருகை தந்து ஆலய உற்சவங்களில் பங்குபற்றுவது போன்று பாசாங்கு செய்து விட்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரையும் கிளிநொச்சி பொலிஸார் கைது செய்திருந்தனர். தொடர்ந்து குறித்த நான்கு பேரையும்...

இணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது!!

இணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. ரன்சம்வெயா (ransomware) என்று அறியப்படுகின்ற கணனி வைரஸின் பரவல் காரணமாக கணனிகளின் இயக்கம் பாதிக்கப்படலாம் என்பதனால் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய தினம் (15) குறித்த வைரஸ் தாக்குதலொன்று இடம்பெறுவதற்கான அபாயம் இருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சந்தேகத்திற்கிடமான அல்லது அறியப்படாத மின்னஞ்சல்களை திறப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு CERT அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த...

புதுக்குடியிருப்பு மரக்கறி சந்தை திறப்பு விழாவில் அவமானப்பட்ட பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மரக்கறி சந்தைக்கான புதிய கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஷ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இவ் நிகழ்வில் அங்கு வருகைதந்த அரசியல்வாதிகள்,அதிகாரிகள் பலருக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதும் அப் பிரதேசத்தை சேர்ந்த பொதுமகன் ஒருவருக்குக்கூட அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பாக இச் சந்தை கட்டட தொகுதிக்கான மிக பெறுமதியான காணியை பொதுமக்கள் இலவசமாக கொடுத்தும் தமக்கான கவுரவம் குறித்த நிகழ்வில் வழங்கப்படவில்லை என்றும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக எமது செய்திப்பிரிவு மேலும் ஆராய்ந்த போது பிரதேசசபை செயலாளர் ,முல்லைமாவட்ட உள்ளூராட்சி...

சுன்னாகம் சந்தி பகுதியில் கடற்படை வாகனம் மோதி ஆசிரியர் படுகாயம்!!

சுன்னாகம் சந்திப்பகுதியில் கடற்படை வாகனம் மோதியதில் ஆசியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  நேற்று முன் தினம் பிற்பகல் 3.13 மணியளவில் காங்கேசந்துறை வீதியூடாக புத்தூர் வீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியர் சுன்னாகம் சந்திப்பகுதியிலிருந்த சமிக்ஞை விளக்கு சிவப்பாக மாறியதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அவ்வேளையில் அவருக்கு பின்புறமாக வேகமாக வந்த கடற்படையினரின் வாகனம் அவரை மோதியதில் அவர் நிலத்தில் வீழ்ந்து காயமடைந்ததுடன் அவருடைய மோட்டார் சைக்கிளின் பின்புறமும் பலத்த சேதமடைந்தது. இச் சம்பவத்தில் மல்லாகம் குளமங்கால் பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரே...

நாவலப்பிட்டியில் தேயிலைத் தொழிற்சாலை தீக்கிரை!

நாவலப்பிட்டியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ளது. நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக நாசமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நாவலப்பிட்டி பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போதும் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ வீபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மின் ஒழுக்கு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்றைய தினம் விடுமுறை என்பதால் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும்,...

முல்லைத்தீவு – தண்ணீரூற்று பொது சந்தைக்கான கட்டடம் முதலமைச்சரால் திறப்பு

முல்லைத்தீவு - தண்ணீரூற்று பொது சந்தைக்கான புதிய கட்டடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனால் சற்று முன் திறந்து வைக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு மரக்கறி சந்தைக்கான கட்டடம் முதலமைச்சரால் திறப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மரக்கறி சந்தைக்கான புதிய கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஷ்வரன் அவர்களால் சற்று முன் திறந்து வைக்கப்பட்டது.