கள்ளக்காதலுக்கு இடையூறு.. மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே கணவனின் கள்ளக்காதல் உறவை கண்டித்ததற்காக மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவர் கூலிவேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனை காரணம் காட்டி சிங்காரம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக ரஞ்சிதத்திடம்...

தென் ஆப்ரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை: தடையை தாண்டுமா நடப்பு சாம்பியன் இந்தியா?

மினி உலக கோப்பையின் அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் இந்தியா முன்னேறுமா? என்ற கேள்விக்கு விடையளிக்கும் லீக் ஆட்டத்தில் கோஹ்லி & கோ இன்று தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. பரபரப்பான இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரின் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அடுத்து இலங்கை அணியுடன் நடந்த போட்டியில் 322 ரன் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தும், பந்துவீச்சு சுத்தமாக...

உங்கள் இடத்திலிருந்தே தாக்குவோம்! சவுதியை மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ்

கத்தார் விவகாரத்தில் வளைகுடா நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கத்தார் நாட்டை தனிமைப்படுத்துவதாக அறிவித்த சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளிப்படையான மிரட்டல் விடுத்துள்ளனர். கத்தார் உடனான அத்தனை உறவுகளையும் முறிப்பதாக வளைகுடா நாடுகள் அறிவித்திருந்தன. தீவிரவாதத்துக்கு கத்தார் துணைபுரிவதாகக் குற்றம்சுமத்தப்பட்டது. இந்தக் குற்றத்தை கத்தார் முற்றிலுமாக மறுத்து வருகிறது. இந்நிலையில், கத்தாரிடமிருந்து நிதியுதவி பெறுவதாகக் கூறப்படும் தீவிரவாத அமைப்புகளுள் ஒன்றான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், கத்தாருக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கி வைத்த...

லண்டன் பாலத்தில் பலரை கொலை செய்ய திட்டம் போட்ட தீவிரவாதிகள்

லண்டன் பாலத்தில் நடைபாதையில் சென்றவர்கள் மீது வேனை ஏற்றி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 7.5 டன் எடையுள்ள பெரிய  லொறி தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்தனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. லண்டன் பாலத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் 3 பேர், கடந்த 3ம் தேதி அன்று நடைபாதையில் சென்றவர்கள் மீது வேனை ஏற்றியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் பலியாயினர், 48 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். இது குறித்த விசாரணையில் பல...

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸியை வீழ்த்தி, வங்கதேசத்தை அரைஇறுதிக்கு அழைத்து சென்றது இங்கிலாந்து

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையோடு ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 7.2 ஓவரில் 40 ரன்னாக இருக்கும்போது வார்னர் 21 ரன்கள் எடுத்த...

வடமராட்சி கிழக்கில் 88வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவினர்கள்!!

வடமராட்சி மருதங்கேனி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த 88 நாட்களாக காணாமல் போன தம்முடைய உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரையில்  தமது பிள்ளைகளுக்கான எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என காணாமல் போனோரின் உறவினர் தெரிவித்துள்ளனர்.    

​​வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் சாகும்வரை உண்ணாவிரத போராட்டமாக மாறும்​!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில் 107 வது நாளாக தொடரந்துகொண்டிருக்கும் நிலையிலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா இன்று (10-06) மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் எங்களுடைய பிள்ளைகள் எங்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் ஆனால் போராட்டமானது 100 நாட்களையும் கடந்து 107 வது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் பெருமளவான மக்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். எங்களுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுவதுடன் அவர்களின் எண்ணம்...

பளை அம்மன் ஆலயத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவிச்சேவை!!

கிளிநொச்சி மாவட்டம் பளை திரியாய் அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஆண்டு உற்சவ பொங்கல் விழாவில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் குறித்த பொங்கல் விழாவிற்கு வருகை தரும் மக்களின் மருத்துவ தேவைகளை கருத்திற்கொண்டு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளையினரால் ஒவ்வொரு வருடமும் முதலுதவிச் சேவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வழமை போல இந்த ஆண்டும் திரியாய் அம்மன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதலுதவிச் சேவைகளில் பல மக்கள் தங்களின் அவசர மருத்துவ முதலுதவி சேவைகளை பெற்று பயனடைந்தனர். குறித்த முதலுதவிச்சேவையில் இலங்கை செஞ்சிலுவைச்...

மீள்குடியேற்றப்பட்டு வாழும் கிளிநொச்சி மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின்பின் மீள்குடியேறிய மக்களுக்கான பல்வேறு வாழ்வாதார உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாண்டு மீள்குடியேற்ற அமைச்சினூடாக 813 பயனாளிகளுக்காக மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் 80 மில்லியன் ரூபா செலவில் குறித்த வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளன. இவற்றில் கடற்தொழிலை வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு 20 மில்லியன் ரூபா செலவிலான உதவித்திட்டங்களும் விவசாயம் கால்நடை வளர்ப்பு சுயதொழில் முயற்சி உள்ளிட்ட ஏனைய வாழ்வாதார தொழில்களை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு 60 மில்லியன் ரூபா செலவிலான உதவித்திட்டங்களும் வழங்கப்படவுள்ளன. குறித்த உதவித்திட்டங்களை பெற்றுக்கொள்ளும் 813 பயனாளிகளும் நான்கு பிரதேச...

வற்றாப்பளை பொங்கலை கேப்பாப்புலவு பிரதான வீதித் தடை நாளை நீக்கப்படும்! இராணுவம் அறிவிப்பு!!

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் பக்த அடியார்கள் புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை பிரதான வீதியூடாக தடைஎதுமின்றி பயணிக்க முடியுமா என பக்த அடியார்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. குறித்த பிரதான வீதி வழி இடையே கேப்பாப்புலவில் இந்த வீதியை நீண்ட காலமாக இராணுவத்தினர் தடை செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (11) தொடக்கம் எதிர்வரும் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை வரைக்கும் குறித்த வீதித்தடையை நீக்குமாறு மீள்குடியேற்ற...