முன்னைய அரசாங்கத்தை விடவும் நல்லாட்சியில் ஊழல்!!

முன்னைய அரசாங்கத்தை விடவும் மோசமான வகையில் இந்த அரசாங்கத்தில் ஊழல் மற்றும் குற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. சர்வதேச தலையீடுகளும், நெருக்கடியும் விரைவில் நாட்டுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. தேசிய அரசாங்கதின் பயணம் தொடர்பில் அரசாங்கத்தில் இருந்தே விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தினை வினவியபோதே கட்சியின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

காணாமல் ஆக்கப்பட்டோரிற்காக ஆறு நாடுகளில் நாளை கவனயீர்ப்பு!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை பெற்றுக்கொள்ளும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உலகில் உள்ள ஆறு நாடுகளில் நாளை ஒரே  நேரத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதி வேண்டி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், நூறாவது நாளையும் தாண்டி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஆனால் அரசாங்கத்தால் இவர்களுக்கான நீதியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. எனவே இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு போராட்டங்களும் கவனயீர்ப்பும் ஆங்காங்கே நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களால் பிரித்தானியா,...

அப்பப்போ உங்க கண்ணுல புழு நெளியிற மாதிரி தெரியுதா? அது என்னனு தெரியுமா?

பல தடவை நீங்கள் இதை கண்டிருக்கலாம், சில சமயம் இது என்ன, ஏது, ஏன் தோன்றுகிறது என்ற சந்தேகங்களும் எழுந்திருக்கலாம். சிலர் இதை ஏதோ கோளாறு என்று கூட எண்ணி அச்சம் கொள்ளலாம். ஆம், உங்கள் கண்களில் சில சமயத்தில் ஏதோ நுண்ணிய புழுக்கள் போல நெளிவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், அது என்ன? ஏது? ஏன் இப்படி கண்களில் தோன்றுகிறது, எதனால் இது நடக்கிறது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்தால், இதோ அதற்கான பதில்... முஸ்காய் வாளிடான்டஸ் (Mucae Volitantes) உங்கள் கண்களில் அவ்வப்போது திடீரென...

ஜூலை மாதம் முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா!!

பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் அரசாங்கத்தினால் எவ்வித இறுதி தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான தேசிய கொள்கைக்கு அமைவாக  வருடாந்தம் ஜூலை முதலாம் திகதி அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதற்கமைவாக, இம்முறையும் குறித்த தேசிய கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் கெழுனு விஜயரத்ன கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் பஸ் கட்டணங்களை...

வவுனியாவில் கடையொன்று தீக்கிரை : பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்!!

வவுனியா ஈரட்டைபெரியகுளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள கடையோன்று நேற்று (10.06.2017) இரவு 10.30மணியளவில் தீக்கிரையானதில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் தீவிபத்தினால் மோட்டார் சைக்கில், துவிச்சக்கரவண்டி உட்பட பல பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன். இவ் தீ விபத்து எவ்வாறு ஏற்ப்பட்டது என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

லொத்தர் சபை விவகாரம் : விற்பனையாளர்களுக்கு மத்தியில் சந்தேகம்!!

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வந்தமையானது லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வு பிரிவு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.  

இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி : பந்தால் தாக்கப்பட்ட திசார பெரேரா வைத்தியசாலையில்..!

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடிவரும், இலங்கை அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான திசார பெரேராவின் தலை பகுதியில் பந்தடிப்பட்டுள்ளதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிற்கு எதிராக நாளை களமிறங்கவுள்ள இலங்கை அணி, நேற்று இங்கிலாந்தின் கார்டிப் மைதானத்தில் பயிற்சில் ஈடுபட்டிருந்த நிலையில், திசார பெரேரா தலையில் பந்தடிப்பட்டு உபாதைக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசார பெரேராவிற்கு எவ்வித பாதிப்புமில்லையெனவும், பந்தடிப்பட்ட பகுதி மாத்திரம் மென்மைநிலை அடைந்துள்ளதாகவும், எவ்வாறாயினும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 8ஆவது...

மீண்டும் மூடப்பட்டது கேப்பாபுலவு வீதி : கேப்பாபுலவில் குழப்ப நிலை!!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தற்காலிகமாக திறக்கப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது. கேப்பாபுலவு கிராமத்துக்குள் தமது கோவிலை மக்கள் வழிபட சென்றுள்ள நிலையில் மக்களுடன் இணைந்து தென்பகுதி பிக்கு ஒருவரும் தென்பகுதி மக்களும் சென்றிருந்த நிலையில் பிரதான வீதியை மீண்டும் மூடியுள்ளதால் ஒரு குழப்பமான நிலை தோன்றியுள்ளது. தற்போது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக உள்ளக பளு தூக்கும் போட்டி!!

யாழ்.பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கான உள்ளக பளுதூக்கும்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலை புதிய வர்த்தக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர் விக்கினேஸ்வரன் கலந்துகொள்வதுடன் போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படும்.

காங்கேசன்துறை விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு கோட்டாபாயவை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலிருந்த பழைய இரும்புகளை இராணுவம் பயன்படுத்திய விவகாரம் தொடர்பிலான விசாரணைக்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க கடந்த வாரம்  விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.