காணாமல் ஆக்கப்பட்டோரின் விசாரணையை முன்னிட்டு ஜனாதிபதி யாழ் வருகை!!

யாழ் மாவட்டத்திற்கு இன்றைய தினம் 4.30 மணியளவில் வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளுடன் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். எனவே கிளிநொச்சி, வவுனியா முல்லைத்தீவு பகுதியில் இருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் 15 பேர் ஜனாதிபதியை நேரடியாக பார்த்து கலந்துரையாடுவதற்க்காக சென்றுள்ளனர்.

அட்டனிலிருந்து கொழும்புக்கு புதிய பஸ் சேவை ஆரம்பம்!!

அட்டன் டிப்போவினால் கொள்வனவு செய்யப்பட்ட புதிய 10 பஸ்களில் இரண்டாவது பஸ் நேற்று இரவு 7.20 மணியளவில் புதிய சேவையாக கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்டது. அட்டன் பிரதேச மக்களின் நலன் கருதி 10 பஸ்கள் 3 கோடி ரூபா நிதியினை செலுத்தி மீதிப்பணத்தினை தவணை அடிப்படையில் வழங்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான 10 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ்களில் இரண்டாவது பஸ்ஸே நேற்று கொழும்பு நோக்கி அட்டன் பிரதேச அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக உடுகல சூரிய தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பஸ்...

செல்பி மோகம் ; பெற்றோர் கண்முன்னே குழந்தைகள் உயிர் பறிபோன சோக சம்பவம்!!

கொள்ளுப்பிட்டியில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் நேற்று பெற்றோர் கண்முன்னே ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் மீளா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்பி புகைப்படம் எடுப்பதற்காக முயற்சித்த போது இருவரும் ரயிலில் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த சம்பவத்தில் 12 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொசன் பெரஹெரவின் இறுதியில் நடந்த சம்பவத்தால் தேரர் பலி!!

கட்டான பிரதேசத்தில் யானையொன்று தாக்கியதில் தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கட்டான விகாரையொன்றில் நேற்று இடம்பெற்ற பொசன் பெரஹெரவின் இறுதியில் குழப்பமடைந்த யானையொன்று குறித்த தேரரை தாக்கியுள்ளது, இதனால் படுகாயமடைந்த அவரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் 25 வயதான தேரர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

அர­சாங்கம் தொடர்ந்தும் பரா­மு­க­மாக இருப்பின் விளை­வுகள் விப­ரீ­த­மாகும்!!

தொடர்ந்து முஸ்லிம் சமூ­கத்தின் பொரு­ளா­தா­ரத்தை இலக்கு வைத்து வேண்­டு­மென்றே தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இந்த விடயம் தொடர்பில் அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்­காது பரா­மு­க­மாக பொறுப்­பற்ற வகையில் இருக்­கு­மானால் விப­ரீத விளை­வு­க­ளையே சந்­திக்க நேரி­டு­மென அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் காட்­ட­மாக தெரி­வித்தார். இத்­த­கைய நாச­கார செயற்­பா­டு­களை மேற்­கொண்­டு­வ­ரு­வோரைக் கண்டு பிடிக்க வேண்­டிய பொறுப்புக் கொண்ட பொலி­ஸாரும் பொலிஸ் திணைக்­க­ளமும் அதனைச் செய்­வதை விடுத்து, இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம் பெறும் போதெல்லாம் அதற்கு பல்­வேறு வியாக்­கி­யா­னங்கள் கூறி வரு­வது வெட்­கக்­கே­டாக உள்­ளது எனவும் அவர் தெரி­வித்தார். முஸ்லிம் வர்த்­தக...

முஸ்லிம் மக்களுக்கு எதிராக தீவிரமடையும் கெடுபிடிகள்!!

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்ந்து இடம்­பெற்று வரும் நிலையில் அத­னைக்­கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்ளத் தவ­றி­யுள்­ள­தாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. எனவே, நல்­லாட்­சியின் மீது முஸ்­லிம்கள் கொண்­டுள்ள நம்­பிக்கை குறைந்து வரு­வ­தா­கவும் அவ்­வ­மைப்­புகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் அண்­மைக்­கா­ல­மாக குறி­வைக்­கப்­பட்டு தீக்­கி­ரை­யாக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் அது தொடர்பில் அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்கள் மாறு­பட்ட கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். குறித்த வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­களை அவ்­வர்த்­தக நிலை­யங்­களின் உரி­மை­யா­ளர்கள் காப்­பு­றுதி பெறு­வ­தற்­காக இவ்வாறு செய்­வ­தா­கவும் அர­சாங்­கத்­தி­லுள்ள சிலர் தெரி­விக்­கின்­றனர். நல்­லாட்சி அர­சாங்கம் கடந்த அர­சாங்­கத்தைப்...

வட­மா­காண சபை ஊழல் விவ­காரம் பிச்­சைக்­காரன் மடியில் கைவைத்த நிலை!

பிச்­சைக்­காரன் மடியில் கை வைப்­பது போன்று வட­மா­காண சபையில் ஊழல் விவ­காரம் அரங்­கே­றி­யுள்­ளதா என தமிழ் மக்கள் மிகுந்த விச­னத்­தோடு கேள்வி எழுப்­பு­வ­துடன் இதன் உண்மை நிலைமை கண்­ட­றி­யப்­பட்டு பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் கோரு­கின்­றனர். இதே­வேளை ஊழல் குற்­றச்­சாட்டு சர்ச்­சையில் சிக்­கி­யுள்ள வட­மா­காண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக கட்சி என்ற வகையில் நட­வ­டிக்கை எடுப்­பதா அல்­லது மாகாண சபை என்ற வகையில் நட­வ­டிக்கை எடுப்­பதா என்ற கேள்வி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் மேலோங்­கி­யுள்­ளது. இதே வேளை வட­மா­காண சபை விவ­கா­ரத்தில் தாம் தலை­யிடப் போவ­தில்லை எனத்...

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் ஆயுத முனையில் நான்கு இலட்சம் ரூபா உட்பட நகைகள் கொள்ளை!!

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் ஆயுத முனையில் நாற்பது பவுன் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் கல்லாறு பகுதியில் நேற்று (11) இடம்பெற்றுள்ளது. கல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்தியவாறு அழைத்து சென்றுள்ளனர். குறித்த பாதிக்கப்பட்டவர்களின்...

கொழும்பில் அமெரிக்காவின் இராணுவ கப்பலான லேக் ஈரி..!

அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான கப்பலான லேக் ஈரி, இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மேலும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள லேக் ஈரி கப்பலை கடற்படை சம்பிரதாயங்களுக்கு ஏற்ப வரவேற்றுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. லேக் ஈரி கப்பலானது 14 நாட்கள் வரை இலங்கையில் நங்குரமிடவுள்ளதாகவும், எதிர்வரும் 25 ஆம் திகதியே இலங்கையிலிருந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சுமார் 360 கப்பல் பணியாளர்களுடன் இலங்கை வந்துள்ள குறித்த கப்பலின் ஊழியர்கள், இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும், அத்தோடு திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு...

தெரசா மேவுக்கு எதிராக மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி!

பிரிட்டன் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கு பொறுப்பேற்று, பிரதமர் தெரசா மே தன் வசமுள்ள தலைமை பொறுப்பையும், ஆட்சியையும் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐந்து அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்தநாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால், வடக்கு அயர்லாந்தின் டியுபி கட்சியுடன் கூட்டணி...