வவுனியா நெடுங்கேணி பகுதியில் கோர விபத்து – ஒருவர் சம்பவ இடத்தில் பலி!!

இன்றைய தினம் வவுனியா நெடுங்கேணிப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி, தண்டுவான் பகுதியைச் சேர்ந்த நல்லையா 52 வயதுடைய சகுந்தலாதேவி என்றவர் சம்பவ இடத்திலேயே பலியானர். தண்டுவானிலிருந்து நெடுங்கேனிக்கு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் வற்றாப்பளையிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்றும் மோதுண்டதில் மேற்படி விபத்து இடம்பெற்றள்ளது. அவ் விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த  32 வயதுடைய கனகலிங்கம் ஜனார்த்தன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் குறித்த காயங்களுக்கு உள்ளான நபர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் மேலதிகமான...

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குரிய காணியின் ஒரு பகுதியை தனியாருக்கு வழங்க முடியாது!!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குரிய காணியின் ஒரு பகுதியை தனியாருக்கு வழங்க முடியாது என்றும் வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி கருதி அனைத்து பொறுப்புள்ள அதிகாரிகளும் செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை கடந்த 2003ம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதியில் பழைய வைத்தியசாலை வளாகத்திலேயே இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 1984ம் ஆண்டு தற்போது வைத்தியசாலை அமைந்துள்ள...

கிளிநொச்சியில் பணிபகிஸ்கரிப்பில் திணைக்கள ஊழியர்கள்!!!

நாடளாவிய ரீதியில் தபால் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் குறித்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக தபால் சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிளிநொச்சி பிரதான தபாலகம் உள்ளிட்ட அனைத்து தபாலகங்களும் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலை: மாற்றுத்திறனாளி சிறுவனின் குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை!!

யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் ஹம்சிகாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கண் கண்ட சாட்சியின் குடும்பத்தாரிடம் பேரம் பேசியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடித்ததுடன், சந்தேகநபர்கள் பேரம் பேசியமை குறித்து விசாரணை நடத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கண் கண்ட சாட்சியாக மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவர் உள்ளார். குறித்த சிறுவனின்...

அம்பிலன்ஸ் தர மறுத்ததால் சிறுமியின் சடலத்தை சைக்கிலில் எடுத்து வந்த அவலம்!!

இந்தியாவின் உத்திர பிரதேசத்தில், சிறுமியின் சடலத்தை எடுத்துச் செல்ல வைத்தியசாலை நிர்வாகம் அம்பிலன்ஸ் கொடுக்க மறுத்ததால், சொந்த ஊரிற்கு சைக்கலில் சடலத்தை எடுத்த வந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாநிலத்தில், மாலக் சத்தி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள்  உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் இறந்த சிறுமியின் சடலத்தை எடுத்துச்செல்ல அம்புலன்ஸ் கேட்டபோது, டிசலுக்கு தேவையான பணம் தந்தால் மட்டுமே அம்பிலன்ஸ் தருவோம் என கூறி வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளது. டிசலுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லாத நிலையில்,...

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒருங்கினைந்த தபால் தொழில் சங்கங்களின் 2 நாள் அடையாள வேலை நிறுத்தம்!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒருங்கினைந்த தபால் தொழில் சங்கங்களின் முன்னனி மேற்கொண்டு வரும் 2 நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய அஞ்சல் அலுவலகமும் தமது பணிகளை நிறுத்தப்பட்டு அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.    

தனங்கிளப்பில் கோர விபத்து!! இவர்களை அடையாளம் காண தயவு செய்து பகிருங்கள்!!

சாவகச்சேரி தனக்கிளப்பில் கோர விபத்து ; யாருக்காவது இவர்களை தெரிந்தால் உதவுங்கள். தனங்கிளப்பு   BEA 5552  ,   BEL 7978 இலக்கங்களுடைய மோட்டார் சைக்கிளில்கள் விபத்துக்குள்ளானது யாருக்காவது தெரிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்..சாவகச்சேரி மருத்துவமனை வட்டுக்கோட்டையை சேர்ந்த நால்வர் படுகாயத்துடன் கோரவிபத்து சிக்குண்டுள்ளனர். பகிர்ந்து உதவுங்கள்.

அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஊடகவியலாளர் முறைப்பாடு!!

தீய வார்த்தைகளினால் தூற்றியதற்காகவும் தன்னை தாக்க வந்தமைக்காகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், ஜாஎல பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் இன்று முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குப்பை மேடு விவகாரம் குறித்தான விசேட பேச்சுவார்த்தை ஒன்று கடந்த வாரம் வத்தளையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமை தாங்கினார். இதன்போது குப்பை குவிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களும் வருகை தந்திருந்தனர். இந்த கூட்டம் நிறைவடைந்த கையோடு...

ஒன்னாபிட்டிய பிரதேசத்தை 15 வயதுடைய மாணவர் தூக்கிட்டு தற்கொலை!!

வரக்காபொல, ஒன்னாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவித தீர்வுமின்றி 105வது நாளாக தொடரும் கோப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம்!!

கோப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி முல்லைத்தீவு இராணுவப்படை கட்டளை தளம் முன்பாக தங்களுடைய நில விடுவிப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 105 நாட்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை அவர்களுக்கு எந்தவிதமான ஒரு உறுதியான தீர்வுகளும் வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னதாக அதாவது கடந்த 11 ஆம் திகதி வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய உற்சவத்தை முன்னிட்டு கோப்பாபுலவு வீதியூடாக செல்லும் பாதை திறக்கப்பட்டிருந்த...