பெண்களின் உடை அமைப்பை குறித்து பேசி பெண்ணை அவமான படுத்த நினைத்தவருக்கு பெண் தொகுப்பாளர் கொடுத்த பதிலடி!!

video
பெண்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் பொதுவெளியில் விமர்சிப்பது ஆணாதிக்க சமுதாயத்தின் வழக்கம். 'பொது இடங்களில் பெண்கள் ‘நாகரிகமான’ உடைகள் அணிய வேண்டும்; லெக்கிங்ஸ் அணியக் கூடாது' என்பது போன்ற பல அறிவுரைகளை அள்ளி வழங்குவார்கள். ஆடைகளோடு சம்பந்தப்படுத்தி நடத்தையைக் கேலி செய்யும் ‘ட்ரோல்’ கலாசாரம், இன்று பரவலாகி வருகிறது. நடிகைகள் அணியும் ஆடைகள் அடிப்படையில் இணையத்தில் ’ட்ரோல்’ செய்யப்படுவது குறித்து சமீபத்தில் 'மிரர் நெள' என்ற ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த...

இந்த வார ராசிபலன் ஜூன் 12 முதல் 18 வரை!!

மேஷம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் தேவையற்ற செலவுகளால் சேமிக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வழக்குகளில் இதுவரை இருந்து வந்த இழுபறியான நிலை மாறி சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால், உற்சாகமாக வேலைகளைச் செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புதிய திட்டங்களுக்குச் சிறப்பான முறையில் செயல் வடிவம் கொடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு...

10-வது மாடியிலிருந்து குழந்தையை தூக்கி எறிந்த தாய்! மனதை உருக்கிய காரணம் இதுதான்!!

லண்டனில் இன்று அதிகாலை 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் இறந்துள்ளனர். இந்த தீ விபத்தில் தனது குழந்தை இறந்துவிடக் கூடாது என்று நினைத்த ஒரு தாய், குழந்தையை 9 அல்லது 10-வது மாடியிலிருந்து கீழே தூக்கி போட்டுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர். தூக்கி எறியப்பட்ட குழந்தையை கீழே இருந்த ஒரு நபர் சரியான நேரத்தில் பிடித்ததாகவும் கூடுதல் தகவல் கூறப்படுகிறது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பலர் அடுக்கு மாடி கட்டடத்தில் இருந்து குதித்த சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதாக...

உடல் பருமன், அதிக எடை: முதலிடம் எந்த நாடு தெரியுமா?

உடல் பருமன், அதிக எடை காரணமாக உயிரழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை ஒட்டி, நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசின் என்ற அமைப்பு பல்வேறு நாடுகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் உடல் பருமன், அதிக எடை கொண்டவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில், குண்டான உருவம் கொண்ட குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தை சீனா பிடித்துள்ளது. மொத்தமாக குழந்தைகள், பெரியவர்கள் சேர்த்து உடல் பருமன் அதிகம் உள்ளவர்களைக்...

லண்டன் 24 மாடி கட்டிட தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு !!

 லண்டன்: லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. லண்டனில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணிநேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாயக மக்களுக்கு உறுதுணையாக புலம்பெயர் தேசத்தில் அணி திரண்ட தமிழர்கள்!

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அமைதி வழி மக்கள் போராட்டங்களுக்கு உறுதுணையாக புலம்பெயர் தேசங்களில் சமபொழுதில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களது சொந்த நிலங்களை மீளத்தரக் கோரியும், சிறிலங்கா படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மைநிலையினை வேண்டியும் தமிழர் தாயகமெங்கும் பரவலாக மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த மக்கள் போராட்டங்களுக்கு தோழமை தெரிவித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானம் ஒன்றினை அரசவையில் நிறைவேற்றியிருந்தது. குறித்த தீர்மானத்துக்கு அமைய, கடந்த 12 ஆம் திகதி , பிரித்தானியா,...

இங்கிலாந்தை விரட்டி அடித்து முதன்முறையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிக்குள் முன்னேறி வரலாறு படைத்தது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இன்று, இங்கிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி மோதியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி சப்ராஸின் அற்புதமான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு வியூகங்களால் ஓட்டங்களைப் பெறத் தடுமாறி இறுதியில் 49.5 பந்துப்பரிமாற்றங்களில் இங்கிலாந்து அணி அனைத்து இலக்குக்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் 46 ஓட்டங்களையும் ஜொனி பெயஸ்ரோ 43 ஓட்டங்களையும் சேர்த்தனர். பந்துவீச்சில்...

முதலமைச்சரைக் கொண்டு செய்து முடித்தவைகள்-ஜெரா

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கில் ஏற்பட்ட “மாற்றத்தினால்” அதிருப்தியுற்ற அரசியல் அறிவுள்ள இளைஞர்கள் முன்னணியின் பக்கம் சரிந்து கொண்டிருக்கையில், தமிழ் மக்கள் பேரவையை அறிவார்ந்தவரும், நீதியரசரும், தமிழ் மக்களின் அதிக வாக்குககளைப் பெற்றவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையைக் கொண்டு வந்தனர். வேறு வழியற்ற முன்னணியும் பேரவையின் பக்கம் சரி ந்து, தமக்குருவாகிவந்த ஆதரவு அணியையும் பேரவைக்கு உவந்தளித்தனர். அங்குகொஞ்சம் இங்குகொஞ்சமாக உருவாகியிருந்த தமிழ் தேசிய மீளெழுச்சியை வடக்கிலும், கிழக்கிலுமாக தெருவில் விட்டு, “இதில் எவ்வித அரசியலும் இல்லை - நாங்கள் யாருக்கும்...

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை வெளியேற்ற எதிர்கட்சியுடன் கை கோர்த்தது தமிழரசுக்கட்சி! முதல்வராக சி.வி.கே.யை நியமிக்கவும் தீர்மானம்!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை வெளியேற்ற எதிர்கட்சியுடன் கை கோர்த்தது தமிழரசுக்கட்சி! முதல்வராக சி.வி.கே.யை நியமிக்கவும் தீர்மானம்! வடக்குமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்கக்கோரி எதிர்க்கட்சி மற்றும் தமிழரசுக்கட்சியினர் 21 பேர் இணைந்து கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒன்று வடக்கு மாகாண ஆளுநரிடம் இன்று இரவு கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைசர் பொ.ஐங்கரநேசன் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் மூவர், வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளடங்கிய குழுவினர் இந்த கோரிக்கை மனுவினைக் கையளித்துள்ளனர். இதனிடையே வடக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி நீக்கப்பட்டவுடன் தற்போதைய அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை முதலமைச்சராக...

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவும் அவசர அவசரமாக ஆளுநரை சந்தித்தார்!

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் நிலைப்பாடு தொடர்பில் அறியமுடியவில்லை. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 22 உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நிலையில் புதன்கிழமை இரவு அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் வடமாகாண ஆளுனரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்த மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தனர். குறித்த உறுப்பினர்கள் ஆளுனரின் வாசஸ்தலத்தை விட்டு வெளியேறிய சில நொடிகளில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆளுனரை சந்திக்க சென்றார்....