முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்?(காணொளி)!!

video
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிச் சென்றபோது மக்கள் மத்தியில் ஏற்பட்ட சோகம்போல் வடமாகாண முதல்வரின் நடவடிக்கையால் வடக்கு மாகாண மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்றுவரை முதல்வருக்கெதிராக சில கறுப்பாடுகள் சதிசெய்வதாக ஊடகங்களில் சுமந்திரன் ஆதரவு மாகாண சபை உறுப்பினர்களை தாக்கிய சிவஞானம் சிறிதரன், முதல்வருக்கெதிராக ஆரம்பத்திலிருந்தே குழப்பங்கள் விளைவித்த சயந்தன்- அஸ்மின் – சிவஞானம் அணியின் முதல்வருக்கெதிரான நடவடிக்கைக்கு கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களை ஒத்துழைக்குமாறு பணித்துள்ளார். வடமாகாணத்தில் முதல்வருக்கு ஆதரவான நிலை...

எனக்கு கட்சி முக்கியமில்லை மக்களே முக்கியமானவர்கள் ! விக்னேஸ்வரன்!!

சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், வெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணம் என்னிடம் இருப்பதால் எல்லோரையும் நம்பியிருந்தேன். இந்த எண்ணத்தில் தொடர்ந்தும் இருக்கிறேன். வடமாகாண சபையின் நடவடிக்கைகள் நிர்வாக ரீதியானதாக காணப்படுகின்றது....

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் வாபஸ் பெறப்படும்!!

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்  சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக இன்று எமது செய்திச்சேவை  வினாவியபோது பா.உ சி.சிறீதரன்   மேற்கண்டவாறு தெரிவித்தார் அத்துடன் இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் பா.உ சாள்ஸ்சும் பேசியுள்ளோம் சம்மந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன் சம்மந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார் இருவரும் சாதகமான மனநிலையில் உள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பாக தலைவர்கள் பேசியிருக்கவேண்டும் ஆனால்...

சீ.விக்கு எதிரான நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் இவர்களா?சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு!!

மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியும் தமிழரசு கட்சியும் இணைந்து வடமாகாண சபையை சீர்குலைக்க முயற்சித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் அவர்களுடைய உறுப்பினர்களை இணைத்த வகையில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தமிழரசு கட்சி முயற்சித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "ஊழல் நிறைந்த ஆட்சி ஒன்றை...

நிலைப்பாட்டில் மாற்றமில்லை! அடம்பிடிக்கிறது தமிழரசுகட்சி!அடுத்து நடக்கப்போகும் திக் திக் நிமிடங்கள்!

வடக்கு மாகாணசபை விவகாரத்தில் தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இன்று பிற்பகல் தொலைபேசி ஊடாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை தொடர்பு கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சில நிபந்தனைகளை விதித்ததாகவும் அதனை அடுத்து நிலைப்பாட்டில் மாறுதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இருப்பினும் தமிழரசுக்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டிலிருந்த பின்வாங்கப் போவதில்லை என உறுதிபடத் தெரிவித்திருப்பதாக அறியமுடிகிறது. இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் வடக்கு முதல்வருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய மாகாணசபை உறுப்பினர் சிவாஜலிங்கம் தலைமையில்...

வடமாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

வடமாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. முதலமைச்சருக்கு ஆதரவாக நாளைய தினம் வடக்கு மாகாணம் முழுவதும் கடையடைப்புக்கு அழைப்பு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளை நாளைய தினம் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து நல்லூரில் ஒன்று கூடுமாறும் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் பேரவை கண்டனம்   வடமாகாணசபை முதலமைச்சரின் மீது சில மாகாணசபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை தமிழ் மக்கள் பேரவை பதிவு செய்கிறது....

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் நாளை போராட்டம்!!மக்களுக்கு அழைப்பு விடுப்பு!!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவால் தமிழ் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி 17 உறுப்பினர்கள் கையயழுத்திட்ட கடிதம் நேற்று இரவு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் கையளிக்கப்பட்டது.  இச்செய்தி பரவியதும் தமிழ் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். இதேவேளை தமிழரசுக் கட்சியின் இக் கொடுஞ்செயல் கண்டு பொது அமைப்புக்கள் கோபாவேசம் அடைந்துள்ளதுடன் அரசாங்கத்துடன் சேர்ந்து இச்சதித் திட்டத்தை தமிழரசுக் கட்சி அரங்கேற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய...

முல்லை காணாமல் ஆக்கப்பட்டோர்; 100-வது நாளாக போராட்டம்!!

முல்லைத்தீவு  மாவட்டத்தில்  இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் ஏனைய வழிகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை 99 ஆவது நாளைக் கடந்த நிலையில் இன்று  வியாழக்கிழமை 100 ஆவது நாளை  எட்டியுள்ள போதும், தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில்  தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில்  இராணுவத்திடம்ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் ஏனைய வழிகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து தமக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீர்வு கிடைக்கும் வரை...

வடமாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து அகற்றுவதை தடுக்க அணி திரளுமாறு அழைப்பு; கஜேந்திரகுமார்!!

தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்; வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்....

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்!!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கான அத்தனை முயற்சியையும் தமிழரசுக் கட்சி செய்துள்ளதென்ற செய்தி தமிழ் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்குவதற்கு யார் முயற்சி செய்தாலும் அவர்கள் தங்கள் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்பதே உண்மை. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டைக் கொண்டு வந்து விசாரணைக் குழுவை அமைக்குமாறு கோரிக்கை விட்டவர்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள். இதனையடுத்தே முதலமைச்சர் விக்னேஸ்வரன் விசாரணைக் குழுவை நியமித்தார். விசாரணைக்...