வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் அவசரமாக கொழும்பு சென்றடைந்தார்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் பதவி தொடர்பில் மாகாணசபை உறுப்பினர்களிடையே எழுந்திருக்கும் பெரும் சர்ச்சையையடுத்து வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று அவசரமாக விமானம் மூலம் கொழும்பு வந்தடைந்தார். மாகாணசபை உறுப்பினர்களால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் இருவேறு தீர்மானங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து சட்ட ஆலோசனைகளை பெறும் நோக்கிலேயே அவர் நேற்று (16) அவசரமாக கொழும்பு வந்ததாக தெரியவருகிறது. வடமாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் வார இறுதி நாட்களில் ஆளுநர் கொழும்பிலுள்ள அரச தரப்பு அதிகாரிகளுடன் விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமையன்று உத்தியோகப்பூர்வ...

சேதப்படுத்தப்பட்ட நாணயங்களுக்கு மாற்றீடுகள் வழக்கப்படமாட்டாது!!

சேதப்படுத்தப்பட்ட, மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களுக்கு 2017.12.31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவுகள் எதனையும் மேற்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாணயத் தாள்களை சேதப்படுத்தல், அதில் மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றாக கருதப்படும். அவ்வாறான செயற்பாடுகள் சிறைதண்டனை, அபராதம் அல்லது இரண்டு விதமான தண்டனைகளையும் ஏற்கவேண்டிய நிலை தோன்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நாணயத் தாள்களை வைத்திருப்பவர்கள் அத்தகைய நாணயத் தாள்களின் முகப்புப் பெறுமதியை இழப்பதன்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுவதற்கு சுமந்திரனின் நிபந்தனை

விசாரணைக் குழுவின் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்படாத வடக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் தொடர்பிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரானால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறினார். வடமாகாண சபையில் எழுந்துள்ள குழப்பநிலை தொடர்பில் அத தெரணவிடம் பேசிய எம். ஏ. சுமந்திரன், டெனிஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் தொடர்பான முதலமைச்சரின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். வடக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வியமைச்சர் த.குருகுலராசா ஆகிய...

‘சாம்பியன்ஸ் டிராபி’- இறுதிப் போட்டியில் வெற்றி பெற கோலியின் ப்ளான் இதுதான்!

மீண்டுமொரு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி. இரு நாட்டின் ரசிகர்கள் மட்டுமன்றி, உலகத்தில் இருக்கும் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் ஞாயிற்றுக்கிழமை இந்த இரு அணிகளுக்கும் இடையில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியைத்தான் ஆர்வமுடன் நோக்கியுள்ளனர். சமீபத்திய வரலாறு இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தாலும், பாகிஸ்தான், எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று யூகிக்க முடியாத நிலை உள்ளதால் போட்டியின் மீது கூடுதல் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. இறுதிப் போட்டிக்கு இரு நாடுகளும் கடுமையாக பயிற்சி எடுத்து வரும் நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது...

‘அரசியலுக்கு வர ரஜினி இந்தியர் என்பதே போதும்’ நடிகர் செந்தில்!!

ரஜினி அரசியலுக்கு வருவதைக் குறித்து நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பம் பல காலமாய் மக்களின் மனதில் இருந்து கொண்டிருந்தது. அதை மேலும் தீவிரமாக்கும் விதிமாக அவரது சமீபத்திய செயல்பாடுகள் இருக்கின்றன. இந்த நிலையில் நகைச்சுவை நடிகரும், அதிமுகவின் தீவிர ஆதரவாளருமான செந்தில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனைச் சந்தித்து திரும்பியவர் அளித்துள்ள பேட்டியில் "தமிழக அரசியலில் இப்போதிருக்கும் நிலைமை தொடர்ந்து நீடித்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு...

போராட்டக்களமாக மாறிய லண்டன்: கோழை, ஓடாதே தெரசா மே-வை பார்த்து கோஷமிட்ட மக்கள்!!

பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள Grenfell Tower என்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய் கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17-பேர் பலியாகியிருப்பதாக கூறி வந்த நேரத்தில் 100-பேர் இறந்திருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். இந்த விபத்தில் சிக்கிய 17-பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் காணமல் போயுள்ளனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது மிகவும் சிரமம் எனவும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்படிருந்தது. இந்நிலையில் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட சென்ற பிரதமர் தெரசா மே, அங்கிருந்த மக்களை பார்க்காமல் சென்றுள்ளார்....

கிளிநொச்சியில் விபத்து: இரு இளைஞர்கள் அவசர சிகிச்சை பிரிவில்!!

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு இளைஞனின் கால் முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிப்போ சந்தியில் இருந்து கனகபுரம் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள், அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம் பிரதான பாதைஊடாக டிப்போ சந்திப்பக்கமாக திரும்பிய கயஸ் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதனாலையே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. அத்துடன் மோட்டர் சைக்கிளில் வந்தவர்களின் அதிவேகமே இவ் விபத்துக்குக் காரணம் என்பது விபத்து...

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (16.06.2017) மதியம் 12.30 மணியளவில் கஞ்சாவுடன் நின்ற இரானுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி அக்கராயன் இரானுவ முகாமில் பணியாற்றும் இரானுவ வீரர் தரங்ககுமார சேனவிரத்ன ( வயது – 33) இன்று விடுமுறையைடுத்து அவரது சொந்த ஊரான மதவாச்சி நோக்கி பேரூந்தில் பயணித்த சமயத்தில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று மதியம் 12.30மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து 16பையில் போதி செய்யப்பட்ட 25கிராம் கேரளா...

முதல்வருக்கு ஆதரவான போராட்டங்கள்: தமிழ் மக்கள் பேரவை நன்றி தெரிவிப்பு!!

முதலமைச்சரின் நிலைப்பாடுகளுக்கு எதிராக சிறிலங்காஅரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்தும், முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும் இன்று நடைபெற்ற கடையடைப்பிற்கு எமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை நன்றிகளை தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், காலநெருக்கடி மிகுந்த சூழலில், மிகக்குறுகிய முன்னறிவித்தலின் மத்தியிலும், தாமாக முன்வந்து ஆதரவு வெளிக்காட்டிய வர்த்தகப்பெருமக்கள், போக்குவரத்து சங்கங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழக சமூகம், ஊடகங்கள் செயற்பாட்டாளர்கள்...

பதவி எனக்கு முக்கியமல்ல: அமைச்சு பொறுப்பை தூக்கி எறியத்தயார் – டெனீஸ்வரன்!!

விசாரணையை ஆரம்பித்தது முதல் அதை கொண்டு சென்ற படிகள் உட்பட அனைத்திலும் வடமாகாண முதலமைச்சர் தவறு செய்துள்ளார் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் இன்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் எவ்வளவு நிதி மோசடி செய்தார்? எங்கு செய்தார்? எப்போது செய்தார் என்ற தொகை மதிப்பீட்டை உங்களினால் வெளிப்படுத்த முடியுமா? முடியாது....