விக்கியை வீழ்த்தினால் அமைச்சு பதவி-சிங்கள உறுப்பினர்களுடன் பேரம்(காணொளி)!!

video
முதலமைச்சரை பதவிநீக்கம் செய்வது என்பதில் உறுதியாக தமிழரசுக்கட்சி வடமாகாண சபையிலுள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த செனிவிரட்ன மற்றும் றிசாட் பதியுதினீன் கட்சியை சேர்ந்த ஜெயதிலக ஆகிய உறுப்பினர்களை தொடர்புகொண்டு தாம் கொண்டுவரும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் உங்களுக்கு அமைச்சு பதவி தருவதாக உத்தரவாதப்படுத்தியுள்ளதாக சிங்கள உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.    

முப்படையினரைப் பயன்படுத்தி குப்பை அகற்ற அரசாங்கம் தீர்மானம்! அமைச்சர் ராஜித!!

முப்படையினரைப் பயன்படுத்தி குப்பை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தொற்று நோய்கள் மற்றும் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. தெருக்களில் குப்பைகள் நிறைந்திருப்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும். எனவே முப்படையினரைப் பயன்படுத்தியேனும் குப்பைகளை ஒழுங்கான முறையில் அகற்ற வேண்டும். இது தொடர்பான முன்மொழிவு ஒன்றை நான் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளேன். மேலும், குப்பைகளை அகற்றும்...

விக்கினேசை மாற்றுவதற்கு மூன்று தாக்குதல் திட்டங்கள்:ஒன்று பிழைத்தால் இன்னொன்று மூலம் தகர்க்கப்படும்.

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனை வீட்டுக்கு அனுப்புவோம் என சுமந்திரன் தரப்பு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்று யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழரசுகட்சி உறுப்பினர்களின் ஊடக பேச்சாளராக கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் என்பவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முதலமைச்சரை பதவிநீக்கம் செய்வது என்பதில் உறுதியாகஉள்ளோம் அதற்காக 3தெரிவுகளை நாம் கொண்டுள்ளோம். அதாவது வடமாகாணசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது அல்லது ஆளும் கட்சிக்குள் ஒருவரை தலைவராக தெரிவு செய்து முதல்வராக அவரை தெரிவு செய்வோம் எல்லா தெரிவுகளுக்குமுரிய முன்னேற்பாடுகளுடனேயே நாம்...

முதலமைச்சரின் முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு, நீதி சமாதான ஆணைக்குழு வலியுறுத்து!!

வடக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சரான நீதியமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மக்களின் ஆணையின்றி பதவி விலகச்செய்வது ஒரு ஜநனாயக விரோதசெயல் என்பதால் அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக யாழ்.மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாகாண சபைத்தேர்தலில் முதல்வராக முன்னிலைப்படுத்தி மக்களிடம் ஆணைபெறப்பட்டது. மக்களும் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளை வழங்கி முதலமைச்சராக்கினர். ஊழல் இல்லாத மாகாணசபையையே மக்கள் விரும்புகின்றார்கள். ஊழல் இருக்கின்றன என கூட்டிக்காட்டப்பட்டபோது களையெடுப்பு அவசியமாகின்றது. எனவே தகுந்த நடவடிக்கையாக...

வவுனியா மாவட்ட வவுனியா மாவட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இளைஞர் அணி ஞானசீலனுக்கு பதிலடி

வவுனியா மாவட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இளைஞர் அணியின் பெயரை பயன்படுத்தி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க திரு க ஞானசீலனுக்கு எந்த உரிமையும் இல்லை என வவுனியாமாவட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இளைஞர் அணித்தலைவர் நல்லைநாதன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பு!!

உலகின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் வடகிழக்கில் 16 திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இன்று திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும் 15 ஆவது திருக்குறள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வும் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி மகாவித்தியாலய சந்தியிலிருந்து ஆரம்பமாகி கரைச்சி பிரதேச சபை வளாகம் வரை திருவள்ளுவரின் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதன் போது...

முதலமைச்சரை மாற்றுவது உறுதி-சயந்தன் தெரிவிப்பு!!

வட மாகாண முதலமைச்சரை மாற்றுவது உறுதி என தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், புதிய முதலமைச்சராக சீ.வி.கே.சிவஞானத்தை நியமிப்பதற்கு அதிக பெரும்பான்மை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அடுத்த படியாக பெரும்பான்மை வாக்குகளை சத்தியலிங்கம் பெற்றுள்ளதாகவும் தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெரும்பான்மையை நிரூபித்து எப்படியும் சீ.வி.கே.சிவஞானத்தை வட மாகாண முதலமைச்சராக்குவது உறுதி எனவும் தமிழரசு கட்சியின் வட...

வடபகுதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள், பெற்றோர் பாதுகாவலர் சங்கம் விடுக்கும் வேண்டுகோள்!!

வடபகுதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள், பெற்றோர் பாதுகாவலர் சங்கம் நாளை பிற்பகல் 02 மணிக்குத் தனது உறுப்பினர்களை யாழ். முனீஸ்வரன் ஆலயத்திற்கு முன் ஒன்றுகூடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறித்த வேண்டுகோளில் மேலும், கடந்த திங்கட்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கும், ஜனாதிபதிக்குமிடையே நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொள்வதற்கு வடபகுதியில் கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. நாங்கள் எத்தனையோ போராட்டங்களை மேற்கொண்ட போதும் சம்பந்தப்பட்ட எவராலும் இதுவரை உரிய பதிலெதுவும் வழங்கப்படவில்லை. ஆகவே, இது தொடர்பில்...

தொற்றுநோய்களுக்கான தேசிய வைத்தியசாலைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு!!

முல்லேரியாவில் அமைந்துள்ள தொற்றுநோய்களுக்கான தேசிய வைத்தியசாலைக்கு இன்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி அவற்றை துரிதமாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். டெங்கு நோயாளர்களினால் வைத்தியசாலை நிரம்பியுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியினால் நோயாளர்களை தங்கவைத்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், நோயாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடனும் அவர்களை தலங்கம, வேத்தர மற்றும் பிலியந்தலை வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைத்த பின்னர் வைத்தியசாலையின் செயற்பாடுகள் மீண்டும் உரியவாறு மேற்கொள்ளப்படுகின்றன. இச்செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்த ஜனாதிபதி வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்களுக்கு தேவையான அனைத்து விசேட மருத்துவ சிகிச்சைகளையும் குறைவின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார். பின்னர்...

“நடவடிக்கையை திருத்துங்கள்” சி.விக்கு சம்பந்தன் அவசர கடிதம்!!

வட­மா­கா­ண­ச­பையில் எழுந்­துள்ள நெருக்­க­டி­யான நிலை­மை தொடர்பில் “குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை திருத்துங்கள்” என சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் நேற்று ஒன்றை அவரச கடிதம் எழுதியுள்ளார்.