வடபகுதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள், பெற்றோர் பாதுகாவலர் சங்கம் விடுக்கும் வேண்டுகோள்!!

206

வடபகுதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள், பெற்றோர் பாதுகாவலர் சங்கம் நாளை பிற்பகல் 02 மணிக்குத் தனது உறுப்பினர்களை யாழ். முனீஸ்வரன் ஆலயத்திற்கு முன் ஒன்றுகூடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த வேண்டுகோளில் மேலும்,

கடந்த திங்கட்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கும், ஜனாதிபதிக்குமிடையே நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொள்வதற்கு வடபகுதியில் கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

நாங்கள் எத்தனையோ போராட்டங்களை மேற்கொண்ட போதும் சம்பந்தப்பட்ட எவராலும் இதுவரை உரிய பதிலெதுவும் வழங்கப்படவில்லை.

ஆகவே, இது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானமொன்றை மேற்கொள்ளும் முகமாகவே யாழ். முனீஸ்வரன் ஆலயத்திற்கு முன்பாக உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Facebook Comments