இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியுடன் ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான்

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி முதன்முறையாக வென்றுள்ளது. இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதிய பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் நடைபெற்ற உலக்கிண்ணம் மற்றும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களில் இந்தியாவிடம் தோல்விகளையே சந்தித்து வந்த பாகிஸ்தான் அணி முதன் முறையாக இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. குறித்த இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய, துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி,...

போர்ச்சுக்கல் காட்டுத் தீ: போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

மின்னலால் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படும் கடுமையான காட்டுத் தீ, மத்திய போர்ச்சுக்கலில் இதுவரை 62 பேரை பலிவாங்கியுள்ளது. கோயம்பிராவிற்கு அருகில், பெனிலாவில் நீரோடை ஒன்றில் இந்த காட்டுத் தீ பிரதிபலித்தது. இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க முயலுகையில் பலர் அவர்களது காரிலேயே இறந்துள்ளனர். பின்புறத்தில் காட்டுத் தீ பரவி வரும் நிலையில் சற்று ஓய்வெடுக்கும் தீயணைப்பு வீரர்கள். சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றில் இந்த காட்டுத் தீ பெரிய சோகமான நிகழ்வு என்று போர்ச்சுகல் பிரதமர் தெரிவித்திருக்கிறார். படுகாயமடைந்தோரில் பலர் தீயணைப்பு வீரர்களாவர். போர்ச்சுக்கலின் பல இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாக...

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா!!

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இன்று காலை 9:00 மணிக்கு இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்தனர். அத்துடன் இன் நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலாளர்,உத்தியோகத்தர்கள் கிராம சேவகர்கள் என பலரும் பதிய கட்டடத்திற்கு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்தனர்.

சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்புவதற்கான கலந்துரையாடல்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்புவதற்கான கலந்துரையாடல் நடைபெற்றது. முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று நண்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு முதலமைச்சரை சந்தித்தனர். அதன் பின்னர் புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,...

கொடிகாமம் வரணி கரம்பைக் குறிச்சியில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வுகள்!!

வரணி கரம்பைக்குறிச்சியில் சமுர்த்தி அபவிருத்தி உத்தியோத்தர்களாக கடமையாற்றிய திரு.த.கிருபாகரன் திரு.பா.கோகுலன் ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது. அண்மையில் பயனாளிகளால் கரம்பைக்குறிச்சி பொதுநோக்கு மண்டபத்தில் நடாத்தப்பட்ட நிகழ்வில் கரம்பைக்குறிச்சி கிராம அலுவலர் திரு.ந.இராசலிங்கம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. தயாளினி, சமுர்த்தி அபவிருத்தி உத்தியோகர்த்தர் திருமதி.ம.சிவனேசன், கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் ஆசிரியர் திரு.சி.சிவானந்தராஜா, கரம்பைக்குறிச்சி பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.து.ஜெயபவான் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர் நிகழ்வில் கிராமத்து மக்கள் கலந்துகொண்டு விழா நாயகர்களுக்கு வாழ்த்துரைகளை வழங்கி சிறப்பித்தனர்.

சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வு!!

உலகின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் வடகிழக்கில் 16 திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று பிற்பகல் 2:00மணியளவில்  சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும் 15 ஆவது திருக்குறள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கலந்து கொண்டு கலாச்சார மண்டபத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை  திரை நீக்கம் செய்து வைத்தார் இதன் போது இந்தியாவிலிருந்து வருகைத்தந்து உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் விஜேபி மற்றும்...

ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரன் கையில் – மூத்த ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு!!

விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும்(A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம். படை, பட்டாளமற்ற தளபதி போல் அதிகாரமற்ற மாகாணசபையின் முதல்வராக இருந்து கொண்டு அவரால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்பது ஓர் அடிப்படை முன்நிபந்தனையாகும். அதற்குள்ளாற்தான் அவரை நோக்க வேண்டும். “வெறுகொண்ட மனம் பிசாசுகளின் பட்டறை” “an idle mind is the devil’s workshop”என்பதுபோல செயற்பட அதிகாரமோ, வாய்ப்புக்களோ...

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வட்டுவாகல் அ.த.க பாடசாலையால் நடாத்தப்பட்ட முல்லைத்தீவு வலய பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க போட்டி இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வட்டுவாகல் அ.த.க பாடசாலையால் நடாத்தப்பட்ட முல்லைத்தீவு வலய பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க போட்டி இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.இதில் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் நான்கு பிரிவுகளாக பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது பிரிவு 1 பெண்கள் முதலாமிடம்_ அ.பாவனா மு/செம்மலை ம.வி இரண்டாமிடம்_ச.நிலாமதி மு/செம்மலை மகாவித்தியாலயம் மூன்றாவது இடம் ந.கிருஸ்திஹா மு/முல்லைத்தீவு மகளீர் வித்தியாலயம் பிரிவு 2 ஆண்கள் முதலாமிடம்_ இ.யதுர்சன் மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயம் இரண்டாமிடம்_.அ.கோமேசன் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மூன்றாவது இடம் ர.மயூரகன் மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயம் பிரிவு 2 பெண்கள் முதலாமிடம்_ ர. சங்கவி.மு/செம்மலை ம.வி இரண்டாமிடம்_ச.சுபாங்கி மு/செம்மலை மகா வித்தியாலயம் மூன்றாவது இடம் அ.ஜெபர்சலா...

புலிகளிடம் இருந்து கருணாவை பிளந்தனர் – ஆயுதப் போராட்டம் அழிந்தது.. அகிம்சைப் போரும் அழிந்து போகுமா?

சரி பிழைகள் ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பால் 3 தசாப்த ஆயுதப் போராட்டமும், அதன் வழி பெற்றப்பட்ட பேரம் பேசும் பலமும் புலிகளின் அழிவின் பின் அழிந்து போனது. இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுக்காலத்தில், சமாந்தரமாக புலிகளை பிளவுபடுத்துவதில் பேரினவாத சக்திகள் முழுமூச்சுடன் ஈடுபட்டன. அதற்காக புலிகளின் பலம்பொருந்திய தளபதியாகவும், கிழக்கை கட்டுப்பாட்டுள் வைத்திருந்தவருமான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரனை புலிகளின் தலமையுடன் முரண்பட வைப்பதற்கான அரசியல் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு எப்போதுமே தமிழரிடம் ஆழ்மனதில் உறைந்து போயிருக்கும்,...

புலிகள் அமைப்பு பிளவடைந்ததாலேயே தோற்றது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதே நிலையா?

விடுதலைப்புலிகள் அமைப்பு கூட பிளவடைந்த நிலையிலேயே தோல்வி நிலைக்கு சென்றது. அந்த வகையிலேயே கட்சிகளை உடைத்து சுயலாப அரசியல் செய்யும் வகையில் சில சக்திகள் செயற்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகள் ஒன்றிணைந்த தமிழ் மக்களின் பொது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என ஏகமனதாக...