சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வு!!

277

உலகின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் வடகிழக்கில் 16 திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்று பிற்பகல் 2:00மணியளவில்  சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும் 15 ஆவது திருக்குறள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கலந்து கொண்டு கலாச்சார மண்டபத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை  திரை நீக்கம் செய்து வைத்தார்

இதன் போது இந்தியாவிலிருந்து வருகைத்தந்து உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் விஜேபி மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Facebook Comments