கிரிக்கெட் வேண்டாம்: ஹாக்கிக்கு மாறுங்கள்: ரசிகர்கள் ஆவேசம்

281

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் இந்திய ரசிகர்கள், ஊடகங்கள், ஸ்பான்ஸர்கள் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஹாக்கிக்கு கொடுப்பதில்லை என்ற வருத்தம் பலரிடம் உள்ளது.
நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 7க்கு 1 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றும் இந்த செய்தி ஊடகங்களில் பெரிதுபடுத்தப்படவில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி அடைந்த இந்திய கிரிக்கெட் அணி குறித்தே ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே இனிமேலும் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நமது தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்ஸர்கள் ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டும் என்றும் விளையாட்டு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Facebook Comments