இந்தியாவில் இருந்து நாடு திரும்பியோருக்கான வாழ்வாதாரப்பயிற்சி நெறி!!

253

அண்மைக்காலமாக இந்தியாவில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருக்கும் இலங்கையர்களுக்கான பல்வேறு உதவிகள் அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இவர்களுக்கான வாழ்வாதார பயிற்சி நெறி ஒன்று நேற்று வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் சோவா நிறுவனத்தால் நடத்தப்பட்டுள்ளது.

65 பயனாளர்கள், இவ்வருடம் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் முதல் கட்டமாக 30 பேருக்கான பயிற்சி நெறியே நேற்று நடைபெற்றது. கடந்த வருடம் 130 பயனாளிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த பயிற்சி நெறியின்போது மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், திட்ட அலுவலர் அ.அமரகாஸன், சமூக வலுவூட்டல் அலுவலர் மேகலா, அபிவிருத்தி உத்தியோகத்தர் இமல்டா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments