இராணுவ விமானம் தரையில் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலி!!

410

அமெரிக்காவில் இராணுவ விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 16 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிசிசிப்பி மாநிலத்தில் உள்ள Leflore County என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

16 பேருடன் பயணித்த C-130 என்ற இராணுவ விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள எப்பிஐ அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் பலர் ஆழந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments