கிளிநொச்சி சென்ற யாழ். இளைஞன் பரிதாபமாக பலி!!

2757

கிளிநொச்சி – பளை, தர்மக்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் யாழ்.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வி.ராஜ்குமார் என்ற 18 வயது இளைஞரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சமிக்ஞை தூண் ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments