யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் அடைமழை பெய்யும்!!

372

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஊவா மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெயும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பிபில பிரதேசத்திலும் இடைக்கிடையே மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை குறைத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

Facebook Comments