தீவுப்பகுதி மக்களுக்கோர் நல்லசெய்தி.!

192

ஊர்காவற்துறை, எழுவைதீவு, அனலைதீவு மக்களின் பயன்பாட்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள எழுதாரகை படகின் வெள்ளோட்டம் இன்றும் நாளையும், கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர், எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் படகு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 134 மில்லியன் ரூபா செலவில் எழுதாரகை படகு டொக்கியாட் நிறுவனத்தினால் கட்டப்பட்டு வருகின்றது. 40 ஆசனங்களைக் கொண்ட இந்தப் படகில் சுமார் 100 பேர் பயணிக்க முடியும். அத்துடன் 3 தொன் பொருள்களை ஒரே தடவையில் கொண்டு செல்ல முடியும்.

எழுவைதீவு கடற்கரைப் பகுதிக்கு சாதாரணமாக பெரிய படகுகள் கொண்டு செல்ல முடியாது. ஆனால் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய படகு இரண்டரை அடி தண்ணீரிலும் மிதகக் கூடியவாறு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

Facebook Comments