யாழில் புலனாய்வுப் பிரிவினரின் சோதனைக்குள்ளான ஊடகவியலாளர்கள்..!

206

யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்கள், ஸ்ரீலங்கா குற்ற விசாரணைப் புலனாய்வுப் பிரிவினரால் இன்றைய தினம் சோதனையின்பின் விசாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நேற்றைய தினம் வித்தியா கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களே இவ்வாறு சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். தம்மை உரிய முறையில் அடையாளம் காட்டாத ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதோடு அவர்கள் எதற்காக எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பின்னர் அடையாளத்தை உறுதிப்படுத்திய ஊடகவியலாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு ஏனையோர் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Facebook Comments