பெறுமதியான வானுடன் ஒருவர் மாயம்! அயல் வீட்டுப் பெண்ணையும் காணவில்லை

865

வான் ஒன்றுடன் 47 வயதான ஒருவர் கடந்த 5 நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி ஹெம்மாத்தகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பட்டன்கலவத்த, கினிஹப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வத்தேகெதர உதயலத் காமினி சேனாதீர என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 11ம் திகதி அவர் 26 லட்சம் பெறுமதியான வானில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக மனைவி கூறியுள்ளார்.

காணாமல் போன தினம் மாலை தனது வாகனத்தை கோபிவத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் வாகனத்தை கொள்வனவு செய்தவரை சந்திக்கச் சென்றதாகவும் இது குறித்தும் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் நபர் காணாமல் போன தினத்தில் அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த திருமணமான பெண் ஒருவரும் காணாமல் போயுள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அயல் வீட்டுப் பெண் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

Facebook Comments