வீதியை விட்டு விலகிய கார்; இருவருக்கு காயம்

197
வட்டவளை கரோலினா பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கார் நுவரெலியாவிலிருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக பனிமூட்டத்துடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் காரில் சென்ற கணவனும், மனைவியும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Facebook Comments