பாரதம் சென்றுள்ள ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாரதத்திற்று விஜயம் செய்திருந்தார்.
இதன் போதே உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி மூகாம்பிகை அம்மன் ஆலயப் பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், பிற்பகல்1.30 மணிவரை ஆலயத்துக்குள் பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
கர்நாடகமாநிலம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து புதுடில்லியில் நடைபெறவுள்ள ஐந்தாவது சர்வதேச சைபர் விண்வெளி தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்தோடு புதுடில்லியில் நாளை வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிரதமருடன் அவரது மனைவி மைத்தி விக்கிரமசிங்க , அமைச்சர் சாகல ரட்ணாயக்க உட்பட பலரும் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்ததாகும்.