யாழ். நக­ரில் குடும்­பத்­த­லை­வர் கொடூரமாக வெட்­டிக்­கொலை!!

இளை­ஞர் கும்­ப­லொன்­றால் கடத்­திச் செல்­லப்­பட்டு வெட்­டுக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கிய நிலை­யில் மீட்­கப்­பட்ட குடும்­பத் தலை­வர், சிகிச்சை பய­ன­ளிக்­காது உயி­ரி­ழந்­தார்.  அவ­ரது மகன் படு­கா­யங்­க­ளு­டன் சிகிச்சை பெற்று வரு­கி­றார். மாடு­களை கள­வா­டி­ய­மை­யு­டன் தொடர்­பு­டைய பிணக்­கொன்­றி­னா­லேயே குடும்­பத்­த­லை­வர் கொலை...

யாழில் பாடசாலை மாணவன் கைது!

யாழ். சங்குவேலிப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்கினைத் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பாடசாலை மணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவனை இன்று காலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார்...

சுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்களுக்கு பிணை.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல யாழ்.நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றில்...

மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்க தீர்மானம்

யாழ்.மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் இன்று (18) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.. மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில், இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும்...

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள யாழ் கலைமதி கிராம மக்களை சந்தித்தார் முதலமைச்சர்

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்  சந்தித்துள்ளார். கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள மயானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்படுகிறது. மக்களை சந்தித்த வடமாகாண முதலமைச்சர்,...

விடுதலைப்புலிகளின் காலத்தில் நல்ல கட்டமைப்புக்கள் காணப்பட்டன! அங்கஜன் இராமநாதன்

தமிழீழவிடுதலைப்புலிகளின் காலப்பகுதியிலு நல்ல கட்டமைப்புக்கள் காணப்பட்டன என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சாரமண்டபத்தில் சர்வதேச தொளிலாளர் சங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திர தொளிலாளர் சங்கமும்...

வட. மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் மின் தடை!

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில சனிக்கிழமை திருத்த வேலைகள் காரணமாக மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி,  காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை யாழ்....

வெள்ளை நாகம் – யாழ். குருநகர்ப் பகுதியில் அதிசயம்..!

யாழ்ப்பாணம், குருநகர்ப் பகுதியில் வெள்ளை நாகம் ஒன்று சுற்றித்திரிவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நாகம், கடற்பரப்பின் பல பகுதிகளில் தென்பட்டதாகவும், இவ்வாறு உப்பு நீரில் நாக பாம்பு தென்படுவது மிக அரிதாகும் எனவும்...

யாழ். நல்லூர் திலீபன் நினைவு தூபியில் நினைவேந்தல்!

யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. ஊணர்வு பூர்வமாக நிகழந்த அந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி...

யாழ்.பல்கலைக்கழகத்தில்தியாகி திலீபனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி!

அகிம்சை போராளி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உணர்வு பூர்வமாக  அனுட்டிக்கப்பட்ட்டது. மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக தொழில்நிலை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.